தேங்காய்ச்சம்மந்தி
தேங்காய்ச்சம்மந்தி தேவையான பொருட்கள் தேங்காய் எண்ணெய்- 1 ஸ்பூன் காய்ந்த மிளகாய்- 6 இஞ்சி- 1 துண்டு உப்பு- தேவையான அளவு தேங்காய்- 1 சின்ன வெங்காயம்- 10 புளி- சிறிதளவு கறிவேப்பிலை- 1 கொத்து செய்முறை முதலில் ஒரு வாணலில் எண்ணெய் சேர்த்து காய்ந்ததும் அதில் காய்ந்த மிளகாய் சேர்த்து வறுத்து எடுத்துக்கொள்ளவும். பின் ஒரு மிக்ஸி ஜாரில் காய்ந்த மிளகாய், இஞ்சி, உப்பு, துருவிய தேங்காய், சின்ன வெங்காயம், புளி, கறிவேப்பிலை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் அரைத்துக்கொள்ளவும். நன்கு கலந்து உருட்டி வைத்தால் கேரளா சம்மந்தி தயார்.