Posts

Showing posts from August, 2023

வேலையை விட்டு வெளியேறிய பிறகும் உங்கள் EPF கணக்கில் வரியில்லா வட்டி கிடைக்குமா?

Image
வேலையை விட்டு வெளியேறிய பிறகும் உங்கள் EPF கணக்கில் வரியில்லா வட்டி கிடைக்குமா? வேலை நிறுத்தப்பட்ட நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் EPF கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படாவிட்டால், அந்தக் கணக்கு செயல்படாத கணக்காக மாற்றப்படும்.  PF சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகளாக கோரப்படாத தொகை மூத்த குடிமக்கள் நல நிதிக்கு மாற்றப்படுகிறது.  இந்த நிதிக்கு மாற்றப்பட்ட பிறகு, பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்து 25 ஆண்டுகளுக்குத் தொகை கோரப்படாமல் இருந்தால், இந்தத் தொகையை மத்திய அரசு தன்னிடமே வைத்துக்கொள்ளும். மேலும் படிக்க | பிஎஃப் கணக்கில் வட்டி எப்போது வரும்? EPFO கூறியுள்ள புதிய அப்டேட் EPF கணக்கில் உள்ள பணத்திற்கு வட்டி கிடைக்குமா? 55 வயது வரை, பங்களிப்பு நிறுத்தப்பட்ட பிறகு அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு EPF கணக்கில் பணத்தை வைத்திருக்க முடியும்.  இதுபோன்ற சூழ்நிலையில், இபிஎப் கணக்கில் வைக்கப்பட்டுள்ள பணத்துக்கு வட்டி தொடர்ந்து கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.  வட்டி விகிதம் நிதியமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட அதே வட்டி விகிதமாக இருக்கும். EPF கணக்கில் பெறப்படும் வட்டிக்கு எப்படி ...