Posts

Showing posts from August, 2024

சமையல் குறிப்புகள்

****  வாழைப்பழம் ஒரு பேப்பரில் சுற்றி வைத்தால் மூன்று நாட்கள் ஆனாலும் கெட்டுப் போகாது. **** குக்கர் மூடியின் உட்புறம் எண்ணெய் தடவி பருப்பு வேகவைத்தால் மூடியில் பருப்பு ஒட்டாமல் இருக்கும். **** தயிரை காற்று புகாத டப்பாவில் வைத்தால் இரண்டு நாட்கள் ஆனாலும் புளிக்காது. ****  அரிசி, பருப்பு போன்றவற்றில் ஒரு பிரெஞ்சு இலை, ஒரு மிளகாய் வற்றல் போட்டு வைத்தால் பூச்சி, புழு அண்டாது. 

இடி_சாம்பார்

Image
இடி_சாம்பார் தேவையான பொருட்கள் 1/4 கப் துவரம்பருப்பு எலுமிச்சை அளவு புளி 15 சின்ன வெங்காயம் 2 பச்சை மிளகாய் 2 முருங்கைக்காய் 4 வெண்டைக்காய் 2 கத்திரிக்காய் 5 துண்டு மாங்காய் 1/4 தேக்கரண்டி வெந்தயம் 1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள் 1 தேக்கரண்டி பெருங்காயத்தூள் சிறிதளவு கறிவேப்பிலை சிறிதளவு கொத்தமல்லி இலை நல்லெண்ணெய் உப்பு தேவையான அளவு இடி சாம்பார் பொடி இடிக்க: 10 மிளகாய் வத்தல் 1 தேக்கரண்டி துவரம்பருப்பு 1/2 தேக்கரண்டி கடலைப்பருப்பு,             மிளகு, அரிசி 3 தேக்கரண்டி கொத்தமல்லி 1 தேக்கரண்டி சீரகம் 1/4 தேக்கரண்டி வெந்தயம் அரைக்க : அரைமுறி தேங்காய் துருவல் 4 சின்ன வெங்காயம் 3 பூண்டு பற்கள் 1/4 தேக்கரண்டி  சீரகம் செய்முறை : துவரம்பருப்பை கழுவி விட்டு 10 நிமிடங்கள் ஊறவைத்து தனியாக வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.   புளியை ஊறவைத்து கரைத்து கொள்ளவும். வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் இடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து எடுத்து உரலில் இடித்தோ (அ) மிக்ஸியில்  திரித்தோ எடுத்துக...

நண்டு கிரேவி

Image
நண்டு கிரேவி  தேவையான பொருட்கள்: நண்டு 1/2 கிலோ சீரகம் 1/2 டீஸ்பூன் பெரிய வெங்காயம், தக்காளி 2 காய்ந்த மிளகாய்4 இஞ்சி பூண்டு விழுது1 டீஸ்பூன் சில்லி பவுடர்1 டேபிள் ஸ்பூன் மல்லித்தூள்3 டேபிள் ஸ்பூன் மிளகுத்தூள்1 டீஸ்பூன் மஞ்சள் தூள் 1/2 டீஸ்பூன் கொத்தமல்லி தழை1 கைப்பிடி கறிவேப்பிலை1 கொத்து தேங்காய் துருவல் 1/2 கப் உப்பு, எண்ணெய்தேவைக்கேற்ப செய்முறை  நண்டை நன்கு சுத்தம் செய்து நன்றாக தண்ணீரில் அலசி வைக்கவும்.  பின்பு 1 கப் தண்ணீர் , மஞ்சள் தூள் , சிறிது உப்பு போட்டு வேக வைக்கவும்.  நண்டு 10 நிமிடத்தில் வெந்து தண்ணீர் வற்றியவுடன் தனியே எடுத்து வைத்துக்கொள்ளவும். பெரிய வெங்காயம், தக்காளி ஆகியவற்றை நறுக்கிக் கொள்ளவும்.   தேங்காய் துருவலை சிறிதளவு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும். ஒரு பெரிய அடிகனமான பாத்திரத்தில் எண்ணெய் காய விடவும்.  சீரகம், கறிவேப்பிலை போடவும்.  பொரிந்தவுடன் வெங்காயம் சேர்க்கவும்.  பின்னர் இஞ்சி பூண்டு விழுதை சேர்க்கவும்.  பிறகு தக்காளி, மிளகாய், உப்பு சேர்த்து கிளறவும். பிறகு சில்லி பவுடர், மல்லித்தூள், ம...

கொழுக்கட்டை

Image
கொழுக்கட்டை தேவையான பொருட்கள் வேர்க்கடலை- 100g வெல்லம்- 150g நெய்- தேவையான அளவு தேங்காய் துருவியது - 1 மூடி ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன் இடியாப்ப மாவு. - 1 கப் உப்பு- 1 சிட்டிகை செய்முறை முதலில் ஒரு பாத்திரத்தில் வெல்லப் பாகு காய்ச்சி எடுத்துக்கொள்ளவும். பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய் சேர்த்து சூடானதும் துருவிய தேங்காய் வெல்ல பாகு, ஒன்றுக்கு பாதியாக அரைத்த வேர்க்கடலை சேர்க்கவும். பின் இது கொஞ்சம் கெட்டியானதும் அதில் நெய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து பூரணத்தை கிளறி இறக்கவும். கொழுக்கட்டை செய்ய இடியாப்பமாவில் உப்பு மற்றும் சுடுதண்ணீர் சேர்த்து கெட்டியாக பிணைந்து எடுத்துக்கொள்ளவும். அடுத்து மாவை வட்டமாக தேய்த்து அதன் மேல்  பூரணத்தை வைத்து ஓரங்களை மடித்துவிடவும். கொழுக்கட்டையை இட்லி பாத்திரத்தில் 15 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான கொழுக்கட்டை ரெடி.  

குஸ்கா

குஸ்கா தேவையான பொருட்கள்: பாஸ்மதி அரிசி - 1 கப் வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் - 2 இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன் கரம் மசாலா - 1 டீஸ்பூன் மிளகாய்ப் பொடி - 1/2 டீஸ்பூன் தயிர் - 2 டேபிள்ஸ்பூன் கொத்தமல்லி இலை - சிறிதளவு புதினா இலை - சிறிதளவு எண்ணெய் ,உப்பு , நீர் - தேவையான அளவு செய்முறை: முதலில் பாஸ்மதி அரிசியை சுமார் 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும்.  ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.  தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, மிளகாய்த்தூள் மற்றும் கசூரி மேத்தி சேர்த்து நன்றாக வதக்கவும். அடுத்ததாக தயிர் சேர்த்து, தண்ணீர் விட்டு லேசாக கொதிக்க விடவும்.  அடுத்து ஊற வைத்த அரிசியை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்றாகக் கிளறவும்.  குறைந்த நெருப்பில் பாத்திரத்தை மூடி, அரிசி வெந்ததும் கொத்தமல்லி மற்றும் புதினா இலை தூவி கிளறினால், சூப்பர் சுவையில் குஸ்கா தயார்.  . நீங்கள் சேர்க்கும் தயிரின் அளவை உங்களது சுவைக்கு ஏற்ப சேர...

உருளைக்கிழங்கு வறுவல்

Image
உருளைக்கிழங்கு வறுவல் தேவையான பொருட்கள் உருளைக்கிழங்கு - 1/2 கிலோ எண்ணெய் - 2 தே.கரண்டி கடுகு , உளுத்தம் பருப்பு - 1தே.கரண்டி கறிவேப்பிலை - 1 கொத்து பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை உப்பு - தேவையான அளவு  வறுத்து பொடி செய்வதற்கு தேவையானவை  கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி சீரகம் - 1 தே.கரண்டி மிளகு, சோம்பு - 1/2 தே.கரண்டி வரமிளகாய் - 5 பட்டை - 1 துண்டு,  கிராம்பு - 2  செய்முறை   உருளைக்கிழங்கை சுத்தம் செய்து குக்கரில் போட்டு, மூழ்கும் அளவுக்கு தண்ணீர்  ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4 அல்லது 5 விசில் வரையில் வேகவைத்து இறக்கி ஆறவிட வேண்டும்.  ஆறியதும் கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ள வேண்டும்.  அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகு, சோம்பு, வரமிளகாய், பட்டை, கிராம்பு ஆகியவற்றை  சேர்த்து நன்றாக வறுத்து இறக்கி குளிரவிட்டு ஒரு மிக்சர் ஜாரில் போட்டு பொடியாக்கி கொள்ள வேண்டும்.   ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ...

நெய் மணக்கும் கார தோசை:

நெய் மணக்கும் கார தோசை தேவையான பொருட்கள்  3 ஸ்பூன் எண்ணெய்  அரை ஸ்பூன் கடுகு  அரை ஸ்பூன் சீரகம்  1 கொத்து கருவேப்பிலை  10 பூண்டு நறுக்கியது  20 சின்ன வெங்காயம்  3 தக்காளி அரைத்தது 1 ஸ்பூன் மிளகாய் பொடி  அரை ஸ்பூன் மல்லிப் பொடி  கால் ஸ்பூன் மஞ்சள் பொடி  கால் ஸ்பூன் சீரகப் பொடி  தோசை மாவு 2 கப்  2 ஸ்பூன் நெய்  செய்முறை :  ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடாகவும்  கடுகு, சீரகம் சேர்த்து கிளறிய பிறகு கருவேப்பிலை சேர்க்கவும்.  சின்ன வெங்கயாத்தை சேர்த்து நன்றாக கண்ணாடி போல் மாறும் வரை வதக்கவும்.  அரைத்த தக்காளியை சேர்த்து கிளரவும்.  தொடர்ந்து மிளகாய் பொடி, மஞ்சள் பொடி, சீரகப் பொடி, மல்லிப் பொடி சேர்த்து கிளறி இறக்கவும். தோசை ஊற்றி வேகவும், அதற்கு மேல் இதைவைத்து பரப்பி, நெய் சேர்த்து மொறு மொறு வென்று சுட்டு எடுக்கவும். 

சப்பாத்திக்கு பச்சை பட்டாணி கிரேவி

Image
சப்பாத்திக்கு பச்சை பட்டாணி சப்பாத்தி, பூரியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும் தேவையான பொருட்கள்:  வறுத்து அரைக்க * சீரகம் - 1 டீஸ்பூன் * கிராம்பு - 4  * பட்டை - 2 துண்டு * அன்னாசிப்பூ - 1  * கசகசா - 1 டீஸ்பூன் * மிளகு - 1 டீஸ்பூன்  * சோம்பு - 1 டீஸ்பூன் * மல்லி - 2 டீஸ்பூன்  * எண்ணெய் - 1 டீஸ்பூன்  * சின்ன வெங்காயம் - 20  * புதினா இலைகள் - 4  * துருவிய தேங்காய் - 1/2 கப்  * பூண்டு - 10 பல் * இஞ்சி - 4 சிறிய துண்டு  * தண்ணீர் - தேவையான அளவு கிரேவிக்கு...  * எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்  * சோம்பு - 1 டீஸ்பூன் * பட்டை - 2  * பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)  * கறிவேப்பிலை - 1 கொத்து  * தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது) *  குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்  * பச்சை பட்டாணி - 1/4 கிலோ  * உப்பு - சுவைக்கேற்ப  * தண்ணீர் - தேவையான அளவு  செய்முறை  * முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், கிராம்பு, பட்டை, அன்னாசிப்பூ, கசகசா, மிளகு, சோம்பு, மல்லி ஆகியவற்றை சேர்...

பாகிஸ்தானி ஸ்டைல் சிக்கன் மசாலா செய்வது எப்படி

Image
 பாகிஸ்தானி ஸ்டைல் சிக்கன் மசாலா செய்வது எப்படி தேவையான பொருட்கள்: * சிக்கன் - 1 1/2 கிலோ * எண்ணெய் - 1 கப் * இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன் * பெரிய வெங்காயம் - 2 , தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது) * பச்சை மிளகாய் - 4 (துண்டுகளாக) * மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன் * மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன் * மல்லித் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன் * உப்பு - சீரகத் தூள் - கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன் * தயிர் - 250 கிராம் * வெள்ளை மிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன் * பிரஷ் க்ரீம் - 150 மிலி * வெண்ணெய் - 50-100 கிராம் * கொத்தமல்லி - சிறிதளவு செய்முறை: * முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும். * பிறகு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடாகவும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும். * பின்பு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி விட வேண்டும். * பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து 3-4 நிமிடம் நன்கு கிளறி விட்டு வேக வைத்து,  பச்சை மிளகாயை சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்...

ஸ்டஃப்டு பூரி(stuffed poori)

Image
ஸ்டஃப்டு பூரி(stuffed poori) ஸ்டப்பிங்( stuffing making) செய்ய...  தேவையானது உருளைக்கிழங்கு 2 கேரட் 1, பீன்ஸ் 8 ,பச்சைப்பட்டாணி ஒரு கைப்பிடி , பெரிய வெங்காயம் ஒன்னு  இஞ்சி, பூண்டு விழுது சிறிதளவு  மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன் ( tspn) கரம் மசாலாத்தூள் ஒரு டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன்(tspn)  உப்பு எண்ணெய் தேவையான அளவு. செய்முறை உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை நீக்கி மசிச்சுட்டு. கேரட் பீன்ஸ் வெங்காயத்தை சுத்தம் செய்து மிகவும் பொடியாக நறுக்கி வைச்சுக்கணும்.  வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் தாளித்து, வெங்காயம், கேரட், பீன்ஸ் பச்சைப் பட்டாணி சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கி, பிறகு இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாடை நீங்க நன்கு வதக்கிட்டு.  கடைசியில் மசித்த உருளைக்கிழங்கு ,கரம் மசாலா தேவையான உப்பு சேர்த்து நன்கு  சுருண்டு வரும் வரை கிளறி இறக்கவும்.  மாவில் சிறு உருண்டை எடுத்து சிறிய கிண்ணம் போல் செய்து அதுக்குள்ள சிறிதளவு கிழங்குக் கலவையை வைச்சு மூடி உருட்டி சிறிய பூரியாக அழுத்தாமல் தேய்க்கவும்.  வாணல...

தக்காளி சாதம் நம்ம ஸ்டைல்

Image
 தக்காளி சாதம் நம்ம ஸ்டைல் தேவையான பொருட்கள் வடித்த சாதம்- ஒரு கப்         தக்காளி- 2,        வெங்காயம்-  2 பூண்டு-  4  பல் ,    இஞ்சி- சிறிது துண்டு மிளகாய் தூள்-  2  டீஸ்பூன் தனியா தூள்-  3  டீஸ்பூன் மஞ்சள் தூள்- மி ளகு தூள்- அரை டீஸ்பூன் எண்ணெய்- அரை குழிக்கரண்டி உப்பு- தேவையான அளவு செய்முறை : அடுப்பில் வாணலி வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு ,  காய்ந்த மிளகாய் ,  கறிவேப்பிலை ,  பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வதக்கிகொங்க. இப்போ அதில் பொடியாக நறுக்கிய பூண்டு ,  இஞ்சி ,  பச்சை மிளகாய் சேர்த்து நன்கு கிளறுங்க. பூண்டு வாசனை வந்ததும் பொடியாக நறுக்கிய தக்காளி பழத்தை சேர்த்து தொக்கு மாதிரி வதக்கிக்கொங்க. இதில் மிளகாய் தூள் ,  மஞ்சள் தூள் ,  தனியா தூள் ,  மிளகுத் தூள் உப்பு சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு கிளறவும்.  பச்சை வாசம் நீங்கி ,  நன்கு சுண்டி வந்த்தும் அதில் கொத்தமல...

தஞ்சாவூர் ஸ்பெஷல் பூண்டு சட்னி

 தஞ்சாவூர் ஸ்பெஷல் பூண்டு சட்னி தேவையான பொருட்கள்: * எண்ணெய் - 3 டீஸ்பூன் * வரமிளகாய் - 15 * முழு பூண்டு - 2 * தக்காளி - 3 * கல்உப்பு - 1 டீஸ்பூன் * நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் * கடுகு - 1/2 டீஸ்பூன் * உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன் * கறிவேப்பிலை - சிறிது செய்முறை: * ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாகவும் , அதில் வரமிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். * அடுத்து உரித்த பூண்டுகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். * பின்பு அதில் தக்காளி , கல் உப்பையும் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும். * தக்காளி நன்கு வதங்கியதும் நன்கு குளிர வைக்க வேண்டும். * அடுத்து மிக்ஸியில்  வதக்கிய பொருட்களை சேர்த்து, ஓரளவு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும். * அடுத்து ஒரு வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும். * பின் அரைத்த சட்னியை அதில் சேர்த்து ஒரு நிமிஷம் நன்கு கிளறவும். சூப்பரா தஞ்சாவூர் ஸ்பெஷல் பூண்டு சட்னி ரெடி