வேலையை விட்டு வெளியேறிய பிறகும் உங்கள் EPF கணக்கில் வரியில்லா வட்டி கிடைக்குமா?



வேலையை விட்டு வெளியேறிய பிறகும் உங்கள் EPF கணக்கில் வரியில்லா வட்டி கிடைக்குமா?



வேலை நிறுத்தப்பட்ட நாளிலிருந்து 3 ஆண்டுகளுக்குள் EPF கணக்கில் இருந்து பணம் எடுக்கப்படாவிட்டால், அந்தக் கணக்கு செயல்படாத கணக்காக மாற்றப்படும்.


 PF சட்டத்தின் கீழ் 7 ஆண்டுகளாக கோரப்படாத தொகை மூத்த குடிமக்கள் நல நிதிக்கு மாற்றப்படுகிறது. 

இந்த நிதிக்கு மாற்றப்பட்ட பிறகு, பணப் பரிமாற்றம் செய்யப்பட்ட நாளிலிருந்து 25 ஆண்டுகளுக்குத் தொகை கோரப்படாமல் இருந்தால், இந்தத் தொகையை மத்திய அரசு தன்னிடமே வைத்துக்கொள்ளும்.

மேலும் படிக்க | பிஎஃப் கணக்கில் வட்டி எப்போது வரும்? EPFO கூறியுள்ள புதிய அப்டேட்

EPF கணக்கில் உள்ள பணத்திற்கு வட்டி கிடைக்குமா?

55 வயது வரை, பங்களிப்பு நிறுத்தப்பட்ட பிறகு அதிகபட்சம் மூன்று ஆண்டுகளுக்கு EPF கணக்கில் பணத்தை வைத்திருக்க முடியும்.

 இதுபோன்ற சூழ்நிலையில், இபிஎப் கணக்கில் வைக்கப்பட்டுள்ள பணத்துக்கு வட்டி தொடர்ந்து கிடைக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

 வட்டி விகிதம் நிதியமைச்சகத்தால் அறிவிக்கப்பட்ட அதே வட்டி விகிதமாக இருக்கும்.

EPF கணக்கில் பெறப்படும் வட்டிக்கு எப்படி வரி விதிக்கப்படும்?

EPF கணக்கிலிருந்து பெறப்படும் வட்டிக்கு சில சூழ்நிலைகளைத் தவிர வரிவிலக்கு உண்டு என்பது உண்மைதான்.

 இருப்பினும், EPF கணக்கில் தொடர்ந்து பங்களிப்பு வந்துகொண்டிருந்தால்தான் அது வரிவிலக்க்குக்கு உட்பட்டிருக்கும்.

 EPF கணக்கு செயல்படும் வரை வட்டி தொடர்ந்து கிடைக்கும்.

உறுப்பினர் ஏற்கனவே ஐந்தாண்டுகள் தொடர்ச்சியான சேவையை PFக்கான பங்களிப்புடன் வழங்கியிருந்தாலும் கூட, வேலை நிறுத்தத்திற்குப் பிறகு EPF கணக்கில் வட்டி மூலம் கிடைக்கும் எந்தவொரு வருமானத்திற்கும் வரி விதிக்கப்படும்.

நீங்கள் ஓய்வு பெற்ற பிறகும் பணியைத் தொடர்ந்தால் என்ன செய்வது?

நீங்கள் ஓய்வு பெற்ற பிறகும் அதே நிறுவனத்திலோ அல்லது வேறு ஏதேனும் நிறுவனத்திலோ சேர்ந்தால் EPF பங்களிப்பைத் தொடர முடியுமா? 

இந்நிலையில், 58 வயது நிரம்பிய ஊழியர்கள் இபிஎஸ் உறுப்பினர் ஆக முடியாது.

 இந்த வயதிற்குப் பிறகும் நபர் தொடர்ந்து பணிபுரிந்தால், EPS -க்கான பங்களிப்பு நிறுத்தப்படும்,

 ஆனால் EPF -க்கான பங்களிப்பு தொடரும். முதலாளி மற்றும் பணியாளர் இருவரின் பங்களிப்பும் EPF கணக்கில் டெபாசிட் செய்யப்படும்.




Comments

Popular posts from this blog

தக்காளி பச்சடி

மாவட்டக் கல்வி அலுவலர்(DEO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை TNPSC வெளியீடு.

பட்டாணி பிரியாணி