பட்டாணி பிரியாணி

வீடே மணக்குற அளவு 10 நிமிஷத்துல இந்த பிரியாணியை செய்யுங்க

உங்களுக்கு இந்த உருளைக்கிழங்கு பட்டாணி பிரியாணியை எப்படி செய்வதென்று தெரிந்து கொள்ள வேண்டுமா? கீழே உருளைக்கிழங்கு பட்டாணி பிரியாணி ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது

தேவையான பொருட்கள்
* பாசுமதி அரிசி - 1 1/2 கப்
                         மசாலாவிற்கு.. 
* இஞ்சி - 1 துண்டு 
* பூண்டு - 6-7 
* மிளகு - 1 டீஸ்பூன் 
* சீரகம் - 1/2 டீஸ்பூன் * சோம்பு - 1/2 டீஸ்பூன் 
                         பிரியாணிக்கு... 
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன் 
* நெய் - 1 டீஸ்பூன் 
* ஏலக்காய் - 2 
* அன்னாசிப்பூ - 1 
* கிராம்பு - 3 
* பட்டை - சிறு துண்டு
 *சோம்பு - 1/2 டீஸ்பூன் 
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
 * வெங்காயம் - 2 (நறுக்கியது) 
* தக்காளி - 1 
* பச்சை பட்டாணி - 1 கப்
 * உருளைக்கிழங்கு - 1 (துண்டுகளாக்கப்பட்டது) 
* தேங்காய் பால் - 2 கப்
 * தண்ணீர் - 1 கப் 
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
 * உப்பு - சுவைக்கேற்ப 
* புதினா - சிறிது (பொடியாக நறுக்கியது) 
* கொத்தமல்லி - சிறிது (பொடியாக நறுக்கியது) 
                         செய்முறை
* முதலில் பாசுமதி அரிசியை நீரில் ஒருமுறை கழுவிவிட்டு, பின் அதில் தேவையான அளவு நீரை ஊற்றி 10-15 நிமிடம் ஊற வைக்க வேண்டும். 

* பின்னர் மிக்சர் ஜாரில் இஞ்சி, பூண்டு, மிளகு, சீரகம், சோம்பு சேர்த்து சற்று கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும். 

* அடுத்து குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் மற்றும் நெய் ஊற்றி சூடானதும், ஏலக்காய், அன்னாசிப்பூ, கிராம்பு, பட்டை, சோம்பு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.

 * பின்பு அதில் நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து, சிறிது உப்பு தூவி நன்கு வதக்க வேண்டும்.

 * பின் அதில் தக்காளி, பட்டாணி, உருளைக்கிழங்கு ஆகியவற்றை சேர்த்து, நன்கு 3-4 நிமிடம் நன்கு வதக்க வேண்டும். 

* பிறகு அதில் 2 கப் தேங்காய் பால் மற்றும் 1 கப் நீரை ஊற்றி கிளறி, கரம் மசாலா மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும்.

 * நீரானது நன்கு கொதித்ததும், அதில் பாசுமதி அரிசியில் உள்ள நீரை வடிகட்டிவிட்டு சேர்த்து கிளறி, மேலே சிறிது பொடியாக நறுக்கிய புதினா மற்றும் கொத்தமல்லியை சேர்த்து கிளறி, குக்கரை மூடி, உயர் தீயில் வைத்து ஒரு விசிலும், குறைவான தீயில் வைத்து ஒரு விசிலும் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்தால், சுவையான உருளைக்கிழங்கு பட்டாணி பிரியாணி தயார்.


Comments

Popular posts from this blog

தக்காளி பச்சடி

மாவட்டக் கல்வி அலுவலர்(DEO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை TNPSC வெளியீடு.