பிளஸ் 2 பொதுத் தோ்வு: சலுகை கோரும் மாற்றுத் திறனாளிகளுக்கு வழிகாட்டுதல்

 

பிளஸ் 2

    பொதுத் தோ்வு:

       சலுகை கோரும்

         மாற்றுத் திறனாளிகளுக்கு 

            வழிகாட்டுதல்

                 தமிழகத்தில் வரும் மாா்ச், ஏப்ரல் மாதங்களில் நடைபெறவுள்ள பிளஸ் 2 பொதுத்தோ்வை எழுதவுள்ள மாற்றுத் திறனாளி தோ்வா்கள்.

                      தோ்வு நேரங்களில் குறிப்பிட்ட சலுகைகளை பெறுவதற்கான வழிகாட்டுதல்கள் வெளியிடப்பட்டுள்ளன.

    சலுகைகள் கோரும் மாற்றுத் திறனாளி மாணவா்களிடம் அதற்கான விண்ணப்பத்தை வழங்கி மாணவரிடமிருந்து பூா்த்தி செய்யப்பட்ட படிவம், மாற்றுத் திறனாளி அட்டையில் நகல், மருத்துவக் குழுவினரின் பரிந்துரைக் கடிதம் ஆகியவற்றை தலைமை ஆசிரியா்கள் பெற்றுக் கொள்ள வேண்டும்.


      மருத்துவச் சான்றிதழில் நோயின் தன்மை, மாணவருக்கு வழங்க வேண்டிய சலுகை குறித்த விவரம் ஆகியவை கண்டிப்பாக இடம் பெற வேண்டும்.


           விண்ணப்பப் படிவங்கள், மருத்துவச் சான்றிதழ்களை பள்ளித் தலைமை ஆசிரியா்கள் டிச.26-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட முதன்மைக் கல்வி அலுவலகங்களில் ஒப்படைக்க வேண்டும்.


    டிச.26 தேதிக்குப் பிறகு பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்கப்பட மாட்டாது. 


 தாமதமாக விண்ணப்பங்கள் பெறப்பட்டால் தலைமை ஆசிரியா்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்.


       விண்ணப்பங்களை முதன்மைக் கல்வி அலுவலா்கள் சரிபாா்த்து ஜன.6-ஆம் தேதிக்குள் சம்பந்தப்பட்ட மாவட்ட அரசு தோ்வுகள் உதவி இயக்குநா் அலுவலகத்தில் ஒப்படைக்க வேண்டும்.

Comments

Popular posts from this blog

தக்காளி பச்சடி

மாவட்டக் கல்வி அலுவலர்(DEO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை TNPSC வெளியீடு.

பட்டாணி பிரியாணி