தமிழகத்தில் குரூப் 1 முதன்மைத் தேர்வு



           தமிழகத்தில் குரூப் 1 
               முதன்மைத் தேர்வு 
                    10 முதல் 13-ந்தேதி வரை 
                           நடைபெற உள்ளது. 


சென்னை, தமிழக அரசின் பல்வேறு துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்காக டி.என்.பி.எஸ்.சி. சார்பில் குரூப் 1 முதன்மைத் தேர்வுகள் நடத்தப்படுகின்றன. 

இதன்படி துணை கலெக்டர், காவல் துணை கண்காணிப்பாளர், வணிக வரித்துறை உதவி ஆணையர், ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர் உள்ளிட்ட பணியிடங்களுக்கு குரூப் 1 தேர்வுகள் மூலம் ஆட்கள் தேர்வு செய்யப்படுகின்றனர்.

இதற்கான முதல்நிலைத் தேர்வு கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற்றது. அதன் முடிவுகள் கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. 

தொடர்ந்து முதல்நிலைத் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கான முதன்மைத் தேர்வுகள் 10-ந்தேதி(நாளை) தொடங்கி 13-ந்தேதி வரை நடைபெற உள்ளன. இதில் 1,333 ஆண்கள், 780 பெண்கள் என மொத்தம் 2,113 பேர் தேர்வு எழுத உள்ளனர்.

Comments

Popular posts from this blog

தக்காளி பச்சடி

மாவட்டக் கல்வி அலுவலர்(DEO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை TNPSC வெளியீடு.

பட்டாணி பிரியாணி