proverbs in english and tamil


50 proverbs 

                        in english and tamil

 1. Look before you leap

ஆழம் தெரியாமல் காலை விடாதே

2. As the fool thinks so the bell clinks

அரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்

3. Put a beggar on horseback 

அற்பனுக்கு வாழ்வு வந்தால் அர்த்த இராத்திரியில் குடை பிடிப்பான்

4. New brooms sweep well

புதிய துடைப்பம் நன்றாக பெருக்கும்

5. Tit for Tat.

பழிக்கு பழி

6. Do in Rome as Romans do.

ஊரோடு ஒத்து வாழ்

7. A closed mouth catches no flies
நுணலும் தன் வாயால் கெடும்

8. The face is the index of the mind.

அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.

9. The mills of God grind slow but sure

அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொள்ளும் 

10. Empty vessels make the most noise

குறைகுடம் கூத்தாடும்

11. Art is long and life is short 

கல்வி கரையில் கற்பவர் நாள் சில

12. East or West, Home is the best.

எலி வளையானாலும் தனி வளை வேண்டும்

13. A bird in the hand is worth two in the bush.

அரசனை நம்பி புருஷனை கைவிடாதே /கிடைக்கப்போகும் பலாக்காயை விட, கையில் இருக்கும் களாக்காயே மேல்

14. All that glitters are not gold

மின்னுவதெல்லாம் பொன்னல்ல

15. A young calf knows no fear

இளங்கன்று பயமறியாது 

16. Let patience have her perfect work 

ஆக்க பொறுத்தவன் ஆற பொறுக்கணும்

17. Barking dogs seldom bite

குரைக்கிற நாய் கடிக்காது

18. Covert alllose all

பேராசை பெரு நட்டம்

19. After a storm cometh a calm

புயலுக்குப் பின்னே அமைதி

20. A bad workman blames his tools

ஆட தெரியாதவள் தெருக்கோணல் என்றாள்

21. Adding fuel to the fire.

எரிகிற கொள்ளியில் எண்ணெய் ஊற்றினாற் போல்

22. A wild goose never laid a tame egg

புலிக்குப் பிறந்தது பூனையாகாது

23. A wise enemy is better than a foolish friend

முட்டாள் நண்பனைவிட கற்றறிந்த பகைவனே மேல்

24. A burnt child dreads the fire

சூடு கண்ட பூனை அடுப்படி வராது

25. Pride comes before fall.

அகம்பாவம் அழிவை தரும் 

26. A guilty conscience needs no accuser

குற்றமுள்ள நெஞ்சு குறு குறுக்கும்

 27. A honey tongue and a heart of gall

அடி நாக்கிலே நஞ்சம், நுனி நாக்கிலே தேனும்

28. A hungry man is an anfry man

பசி வந்திடப் பத்தும் பறந்து போகும்

29. Call a spade a spade

உள்ளதை உள்ளவாறு சொல்

30. Don’t measure the worth of a person by their size

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாது 

மூர்த்தி சின்னதானாலும் கீர்த்தி பெரியது

31. A Leopard Never Changes Its Spots

ஜென்ம புத்தி செருப்பால் அடித்தாலும் போகாது.

32. Habits Die Hard

தொட்டில் பழக்கம் சுடுகாடு மட்டும்.

33. Cleanliness is next to Godliness

தூய்மையே இறைவனுக்கு அடுத்ததாகும்.

34. Coming events cast their shadow before.

ஆனை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே

35. Constant dripping wears away a stone

எறும்பு ஊரக் கல்லும் தேயும்.

36. As you sow, So you reap

வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை விதைத்தவன் தினை அறுப்பான்

37. As the King is, so his subjects are

தாயைப் போல பிள்ளை நூலைப் போல சேலை

அரசன் எவ்வழியோ மக்கள் அவ்வழி 

38. Bare words buy no barley

வெறுங்கை முழம்போடுமா?

39. Be just before you are generous.

ஆற்றில் போட்டாலும் அளந்து போடு

40. Birds of a feather flock together.

இனம் இனத்தைச் சேரும்


41. Bend the twig, Bend the tree/ You can’t teach an old dog new tricks

ஐந்தில் வளையாதது, ஐம்பதில் வளையுமா

42. Distance lends enchantment to the view.

இக்கரைக்கு அக்கரை பச்சை

43. Lood is thicker than water

தான் ஆடாவிட்டாலும் தன் தசை ஆடும்

44. Casting pearls before swine

குரங்கு கையில் பூ மாலைகழுதைக்கு  தெறியுமா கற்பூர வாசனை

45. Better bend the neck than bruise the forehead

தாழ்ந்து நின்றால் வாழ்ந்து நிற்பாய்

46. Charity begins at home

தனக்கு மிஞ்சி தான் தானமும் தர்மமும்

47. Diamond cuts diamond

முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்

பாம்பின் கால் பாம்பறியும்

48. Make hay while the Sun shines/ Strike the iron while it is hot

காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்

49. Too much of anything is good for nothing.

அளவுக்கு மீறினால் அமிர்தமும் நஞ்சு 

50. Failure is the stepping stone to success

தோல்வியே வெற்றிக்கு அடிப்படை

51. Do not look a gift horse in the mouth

தானம் கொடுத்த மாட்டைப் பல்லைப் பிடித்துப் பார்க்காதே

52. Good homer sometime nods

யானைக்கும் அடி சறுக்கும்

53. Do not rob peter to pay paul

கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைக்காதே

54. A cat may look at a king

யானைக்கு ஒரு காலம் வந்தால் பூனைக்கு ஒரு காலம் வரும்

55. Eagles don’t catch flies

பலி பசித்தாலும் புல் தின்னுமா?

56. Every ass loves his bray

காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு

57. Forgive and forget

மறப்போம் மன்னிப்போம்

58. Fish and guests stick in three days

விருந்தும். மருந்தும் மூன்று  நாளைக்கு தான்

59. Familiarity breds contempt

பழகப் பழகப் பாலும் புளிக்கும்

60. Every jack has his jill 

விரலுக்கு ஏற்ற வீக்கம்/ ராமனுக்கு ஏற்ற சீதை / பூட்டுக்கு ஏத்த சாவி

Easy Tamil and English Proverbs

61. Not even a leaf moves without god’s will

அவனின்றி ஒரு அணுவும் அசையாது 

62. First deserve, then desire

முடவன் கொம்புத் தேனுக்கு ஆசைப்படலாமா?

63. God is love

அன்பே கடவுள்

64. Love is blind.

காதலுக்கு கண் இல்லை

65. Think before you act  

எண்ணித் துணிக கருமம் 

66. A constant guest is never welcome 

விருந்தும் மருந்தும் மூன்று நாளைக்கு

67. Haste makes waste

பதறிய காரியம் சிதறும்

68. The pot calls the kittle black

ஈயத்தைப் பார்த்து பல் இளித்ததாம் பித்தளை

69. Health is wealth

நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம்

70. Honesty is the best policy

நேர்மையே சிறந்த கொள்கை

71. Hitch your wagon to a star

உள்ளுவதெல்லாம் உணர்வுள்ளல்

72. Lamb at home and a lion at the chase

வீட்டில எலி, வெளியில புலி

73. It is no use crying over split milk

முடிந்த காரியத்தை நினைத்து பயன் இல்லை

74. Necessity has no law

ஆபத்துக்கு பாவமில்லை

75. Prevention is better than cure

வரும் முன் காப்பதே சிறந்தது.

76. Slow and steady wins the race

நிதானம் வெற்றியை தரும்

77. The pen is mightier than sword.

கத்தி முனையைவிட பேனாமுனை வலிமையானது.

78. Spare the rod and spoil the child

அடியாத மாடு பணியாது

79. Where there is a will, there is a way.​

மனம் இருந்தால் மார்க்கமுண்டு

80. The lawmaker should not be a lawbreaker

வேலியே பயிரை மேய்ந்தது போல

81. No rains, no grains

மழை இல்லையேல் தானியமில்லை

உழைப்பில்லையேல் ஊதியமில்லை

82. If you run after two hares you will catch neither

இரண்டு படகில் காலை வைப்பவன் கரை சேருவதில்லை

83. Jack of all trade is master of none

பல மரங்கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டான்

84. Money makes many

பணம் பத்தும் செய்யும்

85. Man proposes, god disposes

தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்

86. Laughter is the best medicine

வாய் விட்டுச் சிரித்தால் நோய் விட்டுப் போகும்

87. Misfortunes never come single

பட்ட காலிலே படும் கெட்ட குடியே கெடும்

88. Old is gold

பழமையே சிறந்தது

89. Pennywise and pound foolish

கடுகு போன இடம் தெரியும், ஆனால் பூசணிக்காய் போன இடம் தெரியாது.

90. No smoke without fire

நெருப்பின்றி  புகையாது

91. Union is strength

ஒற்றுமையே பலம்

92. Truth alone triumphs

வாய்மையே வெல்லும்

93. Work while your work, play while you play

காலத்தை பயிர் செய்

94. The old fox is caught at last

பல நாள் திருடன் ஒரு நாள் அகப்படுவான்

95. Work is worship

செய்யும் தொழிலே தெய்வம்

96. Time and tide wait for no man

ஐயர் வரும் வரை அமாவாசை காத்திருக்குமா?

97. United we stand, divided we fall

ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு

98. Known is a drop, unknown is an Ocean

கற்றது  கை அளவு , கல்லாதது  உலகளவு

99. A friend in need is a friend indeed

ஆபத்தில் உதவுபவனே உண்மையான நண்பன் 

100. The worth of shade is only known when the sun is beating down hot. 

நிழலின் அருமை வெயிலில் தெரியும்


Comments

Popular posts from this blog

தக்காளி பச்சடி

மாவட்டக் கல்வி அலுவலர்(DEO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை TNPSC வெளியீடு.

பட்டாணி பிரியாணி