பிறப்பு சான்றிதழை இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி
குழந்தையின் பிறப்பு சான்றிதழை இணையதளத்தில் பதிவு செய்யும் வசதி.. மதுரை மாநகராட்சி அறிவிப்பு
தேவைப்படும் ஆவணங்கள்: கர்ப்பிணியின் ஆதார் அட்டை 50 கே.பி.க்கும் (50 KB image file) குறைவான படக்கோப்பை பதிவேற்றம் செய்ய வேண்டும். குடியிருப்பு ஆதாரம் 50 கே.பி.க்கும் குறைவான படக்கோப்பை பதிவேற்றம் செய்ய வேண்டும். மருத்துவரால் கர்ப்பத்தை உறுதி செய்து (சிறுநீர் பரிசோதனை, ரத்தபரிசோதனை, அல்ட்ராசவுண்ட்) மருத்துவமனையில் மருத்துவரின் முத்திரையுடன் கையொப்பமிட்ட அறிக்கையை 50 கே.பி.க்கும் குறைவான படக்கோப்பை பதிவேற்றம் செய்யவேண்டும்.
மதுரை மாநகராட்சி பகுதிகளில் உள்ள கர்ப்பிணிகள் மேற்கண்ட முழு விவரங்களை பி.ஐ.சி.எம்.இ.(PICME) இணையதளத்தில் தாங்களே பதிவு செய்து கர்ப்ப பதிவெண், குழந்தையின் பிறப்பு சான்றிதழ் மற்றும் மகப்பேறு நிதியுதவி பெறுவதற்கு பயன்படுத்தலாம்" இவ்வாறு துரை மாநகராட்சி வெளியிட்ட அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
பிறப்பு சான்றிதழ் வாங்குவது எப்படி: நகராட்சி அல்லது ஊராட்சி அலுவலகத்தில் பிறப்புச் சான்றிதழ் பதிவுப் படிவத்தைப் பெறுங்கள். குழந்தை மருத்துவமனையில் பிறக்கும் போது,குழந்தைக்கு என்று அடையாள எண் வழங்கப்படும். அதை வைத்து சான்றிதழ் பெற விண்ணப்பிக்கலாம். குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பிறப்பு சான்றிதழ் படிவத்தை நிரப்பி தர வேண்டும். குழந்தை பிறந்த 21 நாட்களுக்குள் பதிவு செய்யப்படாவிட்டால், காவல்துறை சரிபார்த்த பிறகு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.
பிறப்பு பதிவுகளின் சரிபார்ப்பு என்பது (தேதி, நேரம், பிறந்த இடம், பெற்றோரின் அடையாளச் சான்று, முதியோர் இல்லம் போன்றவை) சரிபாரக்கப்பட்ட பின்னர், விண்ணப்பதாரருக்கு பிறப்புச் சான்றிதழ் வழங்கப்படும்.
Comments
Post a Comment