பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிக்கவும்

பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரி வேலை வாய்ப்பு; 10-ம் வகுப்பு தகுதி; உடனே விண்ணப்பிக்கவும்!

அருள்மிகு பழனியாண்டவர் கலைக் கல்லூரி வேலை வாய்ப்பு; 13 பணியிடங்கள்; 10 ஆம் வகுப்பு படித்தவர்கள் உடனே அப்ளை பண்ணுங்க!

பழனியில் உள்ள அருள்மிகு பழனியாண்டவர் மகளிர் கலைக் கல்லூரியில் ஆசிரியர், தட்டச்சர், அலுவலக உதவியாளர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. மொத்தம் 13 பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. இந்த பணியிடங்கள் நேரடி நியமனம் அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன. தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் 06.08.2024 அன்று நடைபெறும் நேர்காணலில் நேரடியாக கலந்துக் கொள்ளலாம்.

ஆசிரியர்

காலியிடங்களின் எண்ணிக்கை: 9

ஆங்கிலம் – 1

வணிகவியல் – 2

கணினி அறிவியல் – 1

தாவரவியல் – 1

விலங்கியல் – 1

வணிகவியல் (தமிழ் வழிக்கல்வி) – 2

சைவ சித்தாந்தம் – 1

கல்வித் தகுதி: பி.ஹெச்.டி படித்திருக்க வேண்டும். நெட்/ஸ்லெட் தேர்வுகளில் தகுதி பெற்றிருக்க வேண்டும்.

தட்டச்சர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 10 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தட்டச்சு தெரிந்திருக்க வேண்டும்.

அலுவலக உதவியாளர்

காலியிடங்களின் எண்ணிக்கை : 2

கல்வித் தகுதி : 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். 

வயதுத் தகுதி : தமிழக அரசு விதிகளின் படி வயது வரம்பு உண்டு.

தேர்வு செய்யப்படும் முறை : இந்தப் பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு அடிப்படையில் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

விண்ணப்பிக்கும் முறை : இந்த பணியிடங்களுக்கு https://apacwomen.ac.in/ என்ற இணையதளப் பக்கத்தில் முதலில் விண்ணப்பித்துக் கொள்ள வேண்டும். பின்னர் பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பத்தினை பிரிண்ட் எடுத்து தேவையான ஆவணங்களுடன் கீழ்கண்ட முகவரியில் நடைபெறும் நேர்காணலில் நேரடியாக கலந்துக் கொள்ள வேண்டும். 

முகவரி : அருள்மிகு பழனியாண்டவர் பாலிடெக்னிக் கல்லூரி, பழனி – 624601, திண்டுக்கல்.

நேர்காணல் நடைபெறும் தேதி: 06.08.2024

இந்த அறிவிப்பு தொடர்பாக மேலும் விவரங்கள் அறிய கீழ்கண்ட அறிவிப்பைப் பார்வையிடவும்.



Comments

Popular posts from this blog

தக்காளி பச்சடி

மாவட்டக் கல்வி அலுவலர்(DEO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை TNPSC வெளியீடு.

பட்டாணி பிரியாணி