நைட் சப்பாத்திக்கு 15 நிமிடத்தில் இப்படியொரு சைடு டிஷ்

வெங்காயத்தைக் கொண்டு அட்டகாசமான ஒரு தொக்கு செய்யலாம். இந்த வெங்காய தொக்கு சப்பாத்தியுடன் மட்டுமின்றி, தோசையுடன் சாப்பிடவும் அற்புதமாக இருக்கும். முக்கியமாக இது 15 நிமிடத்தில் செய்யக்கூடியவாறு சுலபமாகவும் இருக்கும்.

தேவையான பொருட்கள்: 
* பூண்டு - 15 பல் 
* சோம்பு தூள் - 1/2 டீஸ்பூன்
 * எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* வெங்காயம் - 5
 (நீளவாக்கில் வெட்டியது)
 * கறிவேப்பிலை - 1 கொத்து 
* குழம்பு மிளகாய் தூள் - 2 டீஸ்பூன்
 * உப்பு - சுவைக்கேற்ப
 * தண்ணீர் - 3/4 டம்ளர்

செய்முறை: 
* முதலில் சிறிய அம்மிக் கல்லில் பூண்டு பற்களை சேர்த்து ஒன்றிண்டாக தட்டிக் கொள்ள வேண்டும். அப்படி தட்டும் போது, அத்துடன் சோம்பு தூளையும் சேர்த்துக் கொள்ள வேண்டும். 
* பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், தட்டி வைத்துள்ள பூண்டு பற்களை சேர்த்து பச்சை வாசனை போக மிதமான தீயில் வைத்து வதக்க வேண்டும். 
* பின்பு அதில் மெல்லியதாகவும், நீளவாக்கிலும் வெட்டி வைத்துள்ள வெங்காயத்தை சேர்க்க வேண்டும்.
 * பின் அதில் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வெங்காயம் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும். 
* பிறகு அதில் குழம்பு மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து பச்சை வாசனை போக 5 நிமிடம் வதக்க வேண்டும். 
* அதன் பின் அதில் 3/4 டம்ளர் நீரை ஊற்றி கிளறி, 10 நிமிடம் மிதமான தீயில் வைத்து, நன்கு சுருங்கும் வரை வதக்கி இறக்கினால், சுவையான வெங்காய தொக்கு தயார்.

Comments

Popular posts from this blog

தக்காளி பச்சடி

மாவட்டக் கல்வி அலுவலர்(DEO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை TNPSC வெளியீடு.

பட்டாணி பிரியாணி