டிஎன்பிஎஸ்சி தேர்வு : இண்டர்வியூ இல்லை...தேர்வில் பாஸ் செய்தால் போதும்
டிஎன்பிஎஸ்சி தேர்வு : இண்டர்வியூ இல்லை...தேர்வில் பாஸ் செய்தால் போதும்
உதவிப் பொறியாளர், வேதியியலாளர் உள்ளிட்ட பணியிடங்களுக்குஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கு கடந்த ஜூலை 26 முதல் விண்ணப்பிக்கலாம் என்று டிஎன்பிஎஸ்சி அறிவிப்பு வெளியிட்டுள்ளது. தமிழக அரசு பணியாளர்கள் தேர்வாணையம் டிஎன்பிஎஸ்சிமூலம் குரூப் 1, 2, 4 போன்ற போட்டி தேர்வுகளின் மூலம் காலி பணியிடங்கள் நிரப்பப்படுகிறது.
இந்நிலையில் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட தொழில்நுட்பப் படிப்புகள் சார்ந்த தேர்வுக்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. குறிப்பாக, உதவிப் பொறியாளர், வேதியியலாளர், புவியியலாளர் உள்ளிட்ட பணியிடங்கள் அடங்கிய ஒருங்கிணைந்த தொழில்நுட்ப சேவைகள் தேர்வுக்கு விண்ணப்பிக்க அறிவிக்கை வெளியாகி உள்ளது.இதில் நீங்கில் விண்ணப்பிக்க www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதள பக்கத்திற்கு சென்று விண்ணப்பிக்கலாம்.அதில் கேட்கப்படும் தகவல்களை பூர்த்தி செய்து விண்ணப்பிக்கலாம்.
இந்தத் தேர்வுக்குஆகஸ்ட் 24 ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்.ஆகஸ்ட் 28 முதல் 30 ஆம் தேதி வரை விண்ணப்பங்களில் திருத்தம் செய்யலாம். அக்டோபர் 14 முதல் 23 ஆம் தேதி வரை பல்வேறு பணியிடங்களுக்குத் தேர்வு நடைபெற உள்ளது. மொத்தம் 53 பதவிகளின் கீழ் 654 காலிப்பணியிடங்களுக்காக இந்தத் தேர்வு நடைபெற உள்ளது.தமிழ் பொது அறிவு ஆப்டிடியூட் மற்றும் மெண்டல் எபிலிட்டி டெஸ்ட் போன்ற பாடத்திட்டங்களின் கீழ் பகுதி 1 க்கானகேள்விகள் கேட்கப்படும். இந்த தேர்வு இரண்டு கட்டமாக நடைபெறும். இன்டர்வியூ கிடையாது.
Comments
Post a Comment