- பனிர் பட்டர் மசாலா
'பன்னிர் மக்னீ' - பனிர் பட்டர் மசாலாவை ரொட்டி, பரோட்டா, புல்கா, நான், பிரியாணி, பிரைட் ரைஸ் இப்படி எது கூட வேணும்னாலும் சேர்த்து சாப்பிடலாம்.
பன்னீர் பட்டர் மசாலா செய்யுறப்போ முந்திரி பருப்புகளை சேர்த்தா மசாலா இன்னும் சுவையா இருக்கும்.
உங்களுக்கு பிரஷ் கிரீம் கிடைக்கலைனா அதே அளவு திக்கான பால் சேர்த்துக்கலாம்.
கசூரி மேத்தின்னு சொல்லப்படுற உலர்ந்த வெந்தய கீரைப் பொடி மறக்காம சேர்த்துக்கோங்க. இது பன்னீர் பட்டர் மசாலாவோட வாசனையை இன்னும் அதிகப்படுத்தும்.
தேவையான பொருட்கள் :
பன்னீர் - 250 கிராம்
பெரிய வெங்காயம் - 1
தக்காளி - 2
பட்டை - 1 துண்டு
லவங்கம் - 3
ஏலக்காய் - 3
முந்திரிப்பருப்பு - 10
இஞ்சி - 1 துண்டு
பூண்டு - 6 பற்கள்
வெண்ணெய் - 4 ஸ்பூன்
சிவப்பு மிளகாய் தூள் - 2 ஸ்பூன்
சீரகத்தூள் - 1/2 ஸ்பூன்
சர்க்கரை - 1/2 ஸ்பூன்
வெந்தய கீரை பொடி - 1/4 ஸ்பூன்
பிரஷ் க்ரீம் - கால் கப்
பொடியாக நறுக்கிய கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
##### ஒரு சட்டியில நறுக்கிய பெரிய வெங்காயம், தக்காளி, பட்டை, லவங்கம், ஏலக்காய், இஞ்சி, முந்திரி, பூண்டு இதையெல்லாம் சேர்த்து அது கூட 500 மிலி தண்ணி சேர்த்து தக்காளி மென்மையா ஆகுற வரைக்கும் வேக வச்சிட்டு அடுப்பை அனைச்சுட்டு நல்லா சூடு ஆறினதும் ஒரு மிக்சி ஜார்ல போட்டு நல்லா அரைச்சுடுங்க.
###### சட்டியில வெண்ணை சேர்த்து அது கூட மிளகாய்த்தூள் சேர்த்து குறைஞ்ச தீயில 3 நிமிஷம் நல்லா வேகட்டும்... அரைச்சு வச்ச கலவையை அது கூட சேர்த்து ஒரு கப் தண்ணி சேர்த்துக்கோங்க. அது கூடவே சீரகத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து நல்லா கலந்துவிட்டு பத்து நிமிஷம் மூடி போட்டு வேக விடுங்க.
#### வெந்ததும் அது கூட சர்க்கரை, வெந்தய கீரை சேர்த்து நல்லா கலந்துக்கோங்க.... அது கூட ப்ரஷ் க்ரீம் சேர்த்து கலந்து விட்டுட்டு அது கூட பனிர் சேர்த்துக்கோங்க.
#### 5 நிமிஷம் நல்லா வெந்ததும் அது கூட நறுக்கிய மல்லி இலை தூவினா மணக்க மணக்க ரெஸ்டாரண்ட் சுவைல பனிர் பட்டர் மசாலா தயார்...
Comments
Post a Comment