கொத்தமல்லி சாதம் எப்படி செய்வது,
கொத்தமல்லி சாதம் எப்படி செய்வது,
தேவையானவை
1 cup பாசுமதி அரிசி, 2 வெங்காயம்
5 சின்ன வெங்காயம்
6 பச்சை மிளகாய்
2 கேரட்
5 பீன்ஸ்
1 பச்சை பட்டாணி
6 பல் பூண்டு
1 சிறு துண்டு இஞ்சி
1/4 tsp மஞ்சள் தூள்
3 tsp துருவிய தேங்காய்
3 கிராம்பு
2 ஏலக்காய்
1 இலவங்கப்பட்டை
1 பிரியாணி இலை
1 நட்சத்திர சோம்பு
15 முந்திரிப் பருப்பு
1 கை வறுத்த வேர்க்கடலை
1/2 tsp எலுமிச்சம்பழ சாறு
தேவையான அளவு கொத்தமல்லி,புதினா,உப்பு,நெய்,எண்ணெய்,தண்ணீர்
செய்முறை
முதலில் பாசுமதி அரிசியை நன்கு கழுவி அதை சுமார் அரை மணி நேரம் வரை ஊற வைத்துக் கொள்ளவும்.
அடுத்து வெங்காயம், கேரட், பீன்ஸ், பச்சை மிளகாய், இஞ்சி, பூண்டு, கொத்தமல்லி, புதினாவை நறுக்கி, பச்சை பட்டாணியை உரித்து, தேங்காயை துருவி, மற்றும் எலுமிச்சம் பழத்தை பிழிந்து சாறை எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு pan னை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் அரை மேஜைகரண்டி அளவு நெய் மற்றும் அரை மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
எண்ணெய் சுட்டதும் அதில் முந்திரிப் பருப்புகளை போட்டு அது பொன்னிறமாகும் வரை அதை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
பின்பு அதில் வேர்க்கடலைகளை போட்டு அது சற்று நிறம் மாறும் வரை அதை வறுத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.
அரை மணி நேரத்திற்க்கு பிறகு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பாசுமதி அரிசியை வேக வைப்பதற்க்கு தேவையான அளவு தண்ணீர் ஊற்றி அதை சுட வைக்கவும்.
தண்ணீர் சுட்டதும் அதில் பாசுமதி அரிசியை போட்டு அதனுடன் தேவையான அளவு உப்பு மற்றும் அரை மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்து சாதத்தை வேக வைத்து எடுத்து ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும்.
பின்பு ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் பச்சை பட்டாணியை போட்டு அதை வேக வைப்பதற்க்கு தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பச்சை பட்டாணியை வேக வைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
இப்பொழுது ஒரு மிக்ஸி ஜாரை எடுத்து அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் ஒரு கை அளவு கொத்தமல்லி, ஒரு கை அளவு புதினா, சின்ன வெங்காயம், பூண்டு, இஞ்சி, நான்கு பச்சை மிளகாய், மற்றும் நாம் துருவி வைத்திருக்கும் தேங்காயை போடவும்.
பின்பு அதில் சுமார் நான்கு மேஜைகரண்டி அளவு தண்ணீரை சேர்த்து அதை நன்கு அரைத்து எடுத்து ஒரு கிண்ணத்தில் வைத்துக் கொள்ளவும்.
அடுத்து ஒரு பாத்திரத்தை மிதமான சூட்டில் அடுப்பில் வைத்து அதில் சுமார் இரண்டு மேஜைகரண்டி அளவு நெய் மற்றும் ஒரு மேஜைகரண்டி அளவு எண்ணெய் சேர்த்து அதை சுட வைக்கவும்.
எண்ணெய் சுட்டதும் அதில் கிராம்பு, ஏலக்காய், இலவங்கப்பட்டை, பிரியாணி இலை, மற்றும் நட்சத்திர சோம்பை சேர்த்து அதை சுமார் அரை நிமிடம் வரை வதக்கவும்.
அரை நிமிடத்திற்க்கு பிறகு அதில் நாம் நறுக்கி வைத்திருக்கும் வெங்காயம் மற்றும் பச்சை மிளகாயை சேர்த்து வெங்காயம் சற்று நிறம் மாறும் வரை அதை வதக்கவும்.
வெங்காயம் சற்று நிறம் மாறியதும் அதில் நாம் பொடியாக நறுக்கி வைத்திருக்கும் கேரட், பீன்ஸ், மற்றும் வேக வைத்து எடுத்து வைத்திருக்கும் பச்சை பட்டாணியை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு சுமார் ஐந்து நிமிடம் வரை வேக விடவும்.
ஐந்து நிமிடத்திற்க்கு பிறகு அதில் மஞ்சள் தூள் மற்றும் ஒரு மேஜைகரண்டி அளவு உப்பை சேர்த்து அதை நன்கு கிளறி விடவும்.
பின்பு அதில் நாம் அரைத்து வைத்திருக்கும் மசாலா பேஸ்ட்டை சேர்த்து ஒரு கையளவு தண்ணீர் தெளித்து அதை நன்கு கிளறி விட்டு அதனின் பச்சை வாசம் போகும் வரை அதை வதக்கவும்.
மசாலா பேஸ்ட்டின் பச்சை வாசம் போனதும் அதில் நாம் வேகவைத்து எடுத்து வைத்திருக்கும் பாசுமதி அரிசியை சேர்த்து அரிசி உடைந்து விடாமல் அதை பக்குவமாக ஒரு கரண்டியின் மூலம் நன்கு கிளறி விடவும்.
அடுத்து அதில் நாம் வறுத்து வைத்திருக்கும் முந்திரிப் பருப்பு மற்றும் வேர்க்கடலையை சேர்த்து அதை நன்கு கிளறி விட்டு எடுத்து ஒரு தட்டில் வைத்து சுட சுட பரிமாறலாம்
Comments
Post a Comment