பூண்டு தக்காளி சட்னி
பூண்டு தக்காளி சட்னி

தேவையான பொருட்கள்:
* பூண்டு - 7 பல்
* புளி - சிறிய நெல்லிக்காய் அளவு
* தக்காளி - 4
* தக்காளி - 4
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* உப்பு - சுவைக்க
தாளிப்பதற்கு
* நல்லெண்ணெய் - 1 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - 1 கொத்து
* பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை
செய்முறை:
* முதலில் மிக்சர் ஜாரில் 6-7 பூண்டு பற்கள், புளி ஒரு சிறிய நெல்லிக்காய் அளவு மற்றும் 4 மீடியம் அளவு தக்காளியை நறுக்கி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* பின் அதில் மிளகாய் தூள் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து, நீர் ஊற்றாமல் நன்கு அரைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை மற்றும் பெருங்காய தூள் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பிறகு அதில் அரைத்து வைத்துள்ளதை சேர்த்து நன்கு கிளறி விட வேண்டும்.
* பின் அதை மூடி வைத்து, பச்சை வாசனை போய் எண்ணெய் பிரிந்து வரும் வரை வேக வைத்து இறக்கினால், சுவையான பூண்டு தக்காளி சட்னி தயார்.
Comments
Post a Comment