சப்பாத்திக்கு பச்சை பட்டாணி கிரேவி

சப்பாத்திக்கு பச்சை பட்டாணி


சப்பாத்தி, பூரியுடன் சாப்பிட அட்டகாசமாக இருக்கும்

தேவையான பொருட்கள்: 

வறுத்து அரைக்க

* சீரகம் - 1 டீஸ்பூன் * கிராம்பு - 4

 * பட்டை - 2 துண்டு * அன்னாசிப்பூ - 1

 * கசகசா - 1 டீஸ்பூன் * மிளகு - 1 டீஸ்பூன் 

* சோம்பு - 1 டீஸ்பூன் * மல்லி - 2 டீஸ்பூன் 

* எண்ணெய் - 1 டீஸ்பூன்

 * சின்ன வெங்காயம் - 20

 * புதினா இலைகள் - 4 

* துருவிய தேங்காய் - 1/2 கப் 

* பூண்டு - 10 பல் * இஞ்சி - 4 சிறிய துண்டு

 * தண்ணீர் - தேவையான அளவு

கிரேவிக்கு... 

* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்

 * சோம்பு - 1 டீஸ்பூன் * பட்டை - 2 

* பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது) 

* கறிவேப்பிலை - 1 கொத்து

 * தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது) * 

குழம்பு மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்

 * பச்சை பட்டாணி - 1/4 கிலோ 

* உப்பு - சுவைக்கேற்ப

 * தண்ணீர் - தேவையான அளவு

 செய்முறை

 * முதலில் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் சீரகம், கிராம்பு, பட்டை, அன்னாசிப்பூ, கசகசா, மிளகு, சோம்பு, மல்லி ஆகியவற்றை சேர்த்து நல்ல மணம் வரும் வரை வறுத்து ஒரு தட்டில் எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

 * பின் அதே வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடானதும், சின்ன வெங்காயத்தை சேர்த்து கண்ணாடி பதத்திற்கு வதக்க வேண்டும். 

* பின்பு அதில் புதினா இலைகள், துருவிய தேங்காய், பூண்டு, இஞ்சி சேர்த்து நன்கு பொன்னிறமாக வதக்கி இறக்கி குளிர வைக்க வேண்டும். 

* பிறகு மிக்சர் ஜாரில் வறுத்த மற்றும் வதக்கிய பொருட்களை சேர்த்து, சிறிது நீரை ஊற்றி நன்கு மென்மையாக அரைத்துக் கொள்ள வேண்டும். 

* பின்னர் குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், சோம்பு, பட்டை சேர்த்து தாளிக்க வேண்டும்.

 * பின் அதில் பொடியாக நறுக்கிய வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்க வேண்டும். 

* அடுத்து அதில் தக்காளியை சேர்த்து மென்மையாகும் வரை வதக்க வேண்டும். 

* பின்பு அதில் குழம்பு மிளகாய் தூள் சேர்த்து 1 நிமிடம் கிளறி, பின் அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து, அதோடு பச்சை பட்டாணியையும் சேர்த்து, சுவைக்கேற்ப உப்பு தூவி, கிரேவிக்கு தேவையான அளவு நீரை ஊற்றி கிளறி, குக்கரை மூடி 3 விசில் விட்டு இறக்கினால், சுவையான பச்சை பட்டாணி கிரேவி ரெடி.

Comments

Popular posts from this blog

தக்காளி பச்சடி

மாவட்டக் கல்வி அலுவலர்(DEO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை TNPSC வெளியீடு.

பட்டாணி பிரியாணி