குஸ்கா

குஸ்கா

தேவையான பொருட்கள்:

  • பாஸ்மதி அரிசி - 1 கப்

  • வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் - 2

  • இஞ்சி-பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்

  • கரம் மசாலா - 1 டீஸ்பூன்

  • மிளகாய்ப் பொடி - 1/2 டீஸ்பூன்

  • தயிர் - 2 டேபிள்ஸ்பூன்

  • கொத்தமல்லி இலை - சிறிதளவு

  • புதினா இலை - சிறிதளவு

  • எண்ணெய் ,உப்பு , நீர் - தேவையான அளவு

செய்முறை:

முதலில் பாஸ்மதி அரிசியை சுமார் 30 நிமிடங்கள் தண்ணீரில் ஊற வைத்துக் கொள்ளவும். 

ஒரு பாத்திரத்தில் எண்ணெய் ஊற்றி சூடானதும், நறுக்கிய வெங்காயத்தை சேர்த்து பொன்னிறமாக வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும். 

தக்காளி வதங்கியதும் இஞ்சி பூண்டு பேஸ்ட், கரம் மசாலா, மிளகாய்த்தூள் மற்றும் கசூரி மேத்தி சேர்த்து நன்றாக வதக்கவும். அடுத்ததாக தயிர் சேர்த்து, தண்ணீர் விட்டு லேசாக கொதிக்க விடவும். 

அடுத்து ஊற வைத்த அரிசியை சேர்த்து தேவையான அளவு உப்பு போட்டு நன்றாகக் கிளறவும். 

குறைந்த நெருப்பில் பாத்திரத்தை மூடி, அரிசி வெந்ததும் கொத்தமல்லி மற்றும் புதினா இலை தூவி கிளறினால், சூப்பர் சுவையில் குஸ்கா தயார். 

. நீங்கள் சேர்க்கும் தயிரின் அளவை உங்களது சுவைக்கு ஏற்ப சேர்த்துக் கொள்ளுங்கள். 

லெமன் லேசாக சேர்த்து கிளறினால் டேஸ்ட் சூப்பரா  இருக்கும். 


Comments

Popular posts from this blog

தக்காளி பச்சடி

மாவட்டக் கல்வி அலுவலர்(DEO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை TNPSC வெளியீடு.

பட்டாணி பிரியாணி