பன்னீர் குடைமிளகாய் கிரேவி
பன்னீர் குடைமிளகாய் கிரேவி செய்வது எப்படி
தேவையான பொருட்கள்
▢1 பாக்கெட் பன்னீர்
▢2 பெரிய வெங்காயம்
▢2 தக்காளி
▢2 பச்சை மிளகாய்
▢1 குடைமிளகாய்
▢1/2 டீஸ்பூன் மஞ்சள் தூள்
▢1 டீஸ்பூன் கரம் மசாலா தூள்
▢1 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
▢1/4 கரம் ஃப்ரெஷ் க்ரீம்
▢1 டேபிள் ஸ்பூன் பட்டர்
▢1/2 டீஸ்பூன் சீரகம்
▢1/2 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது
▢2 பட்டை, கிராம்பு, ஏலக்காய்
▢1 பிரியாணி இலை
▢உப்பு தேவையான அளவு
செய்முறை
▢ முதலில் பன்னீரை துண்டுகளாக நறுக்கி அதனுடன் மிளகாய் தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து கலந்து ஊற வைத்து கொள்ளவும்.
▢ பின் வெங்காயம் மற்றும் தக்காளியை ஒரு மிக்ஸி ஜாரில் சேர்த்து தனித்தனியாக விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
▢ ஒரு கடாயை அடுப்பில் பட்டர் சேர்த்து உருகியதும் சீரகம், பட்டை, பிரிஞ்சி இலை, இஞ்சி பூண்டு விழுது, வெங்காயம், தக்காளி விழுது சேர்த்து வதக்கவும்.
▢ பின் நறுக்கி வைத்துள்ள பச்சை மிளகாய், மிளகாய்த்தூள், மஞ்சள் தூள், கரம் மசாலா தூள், உப்பு சேர்த்து நன்கு வதக்கவும். பின் கொஞ்சமாக தண்ணீர் விட்டு மூடி வைத்து பச்சை வாசனை போக வதக்கவும்.
▢ இது சிறிது கெட்டியானதும் ஃப்ரெஷ் கிரீம் சேர்த்து கலந்து, பின் பன்னீர் கேப்ஸிகம் இரண்டையும் சேர்த்து நன்கு கலந்து மூடி வைத்து இரண்டு நிமிடங்கள் கொதிக்க விட்டு இறக்கவும்.
▢ பன்னீர் கேப்ஸிகம் மசாலா தயார்.
Comments
Post a Comment