உருளைக்கிழங்கு வறுவல்

உருளைக்கிழங்கு வறுவல்
தேவையான பொருட்கள்

உருளைக்கிழங்கு - 1/2 கிலோ

எண்ணெய் - 2 தே.கரண்டி

கடுகு , உளுத்தம் பருப்பு - 1தே.கரண்டி

கறிவேப்பிலை - 1 கொத்து

பெருங்காயத் தூள் - 1 சிட்டிகை

உப்பு - தேவையான அளவு 

வறுத்து பொடி செய்வதற்கு தேவையானவை 

கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு - 1 தே.கரண்டி

சீரகம் - 1 தே.கரண்டி

மிளகு, சோம்பு - 1/2 தே.கரண்டி

வரமிளகாய் - 5

பட்டை - 1 துண்டு,  கிராம்பு - 2 

செய்முறை 

 உருளைக்கிழங்கை சுத்தம் செய்து குக்கரில் போட்டு, மூழ்கும் அளவுக்கு தண்ணீர்  ஊற்றி, குக்கரை மூடி அடுப்பில் வைத்து, 4 அல்லது 5 விசில் வரையில் வேகவைத்து இறக்கி ஆறவிட வேண்டும். 

ஆறியதும் கிழங்கின் தோலை நீக்கிவிட்டு, துண்டுகளாக வெட்டி எடுத்து கொள்ள வேண்டும். 

அடுத்து ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, அதில் கடலைப் பருப்பு, உளுத்தம் பருப்பு, சீரகம், மிளகு, சோம்பு, வரமிளகாய், பட்டை, கிராம்பு ஆகியவற்றை  சேர்த்து நன்றாக வறுத்து இறக்கி குளிரவிட்டு ஒரு மிக்சர் ஜாரில் போட்டு பொடியாக்கி கொள்ள வேண்டும். 

 ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு, கறிவேப்பிலை போட்டு  தாளிக்க வேண்டும். 

அதனுடன் நறுக்கிய உருளைக்கிழங்கை சேர்த்து 2 நிமிடங்கள் வரையில் நன்றாக வதக்க வேண்டும். 


பின்பு அதனுடன் பெருங்காயத் தூள், சுவைக்கேற்ப உப்பு மற்றும் அரைத்து வைத்துள்ள பொடியை சேர்த்து நன்றாக கிளற வேண்டும்.


மொறுமொறுவென்ற  பதத்துக்கு வரும் வரையில்  குறைவான தீயில் வறுத்து இறக்கினால், செட்டிநாடு உருளைக்கிழங்கு வறுவல் தயார்.  


Comments

Popular posts from this blog

தக்காளி பச்சடி

மாவட்டக் கல்வி அலுவலர்(DEO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை TNPSC வெளியீடு.

பட்டாணி பிரியாணி