திருநெல்வேலி’ என்று பெயர் காரணம்

திருநெல்வேலி’ என்று பெயர் வரக் காரணம் தெரியுமா?

திருநெல்வேலிக்கு அந்த பெயர் வருவதற்கான காரணம் என்னவென்று தெரியுமா?அதற்கு ஒரு கதை சொல்லப்படுகிறது. அதைப் பற்றி விரிவாக இந்தப் பதிவில் காண்போம்.

சிவபெருமானின் மீது அளவுக்கடந்த பக்தி வைத்திருந்தார் வேதப்பட்டர். இவர் தினமும் வீடுவீடாக சென்று நெல்லை பெற்று இறைவனின் நெய்வைத்தியத்திற்காக பெற்ற நெல்லை சன்னதி முன் உலர போட்டுவிட்டு குளிக்கச் செல்வது வழக்கம். அவ்வாறு ஒருநாள் செய்யும்போது திடீரென்று மழைப் பெய்யத் தொடங்கிவிட்டது.

குளித்துக்கொண்டிருந்த வேதப்பட்டர் மழைநீரில் நெல் நனைந்துவிட போகிறது என்று வேகமாக ஓடி வந்துப் பார்த்தால், நெல்லை சுற்றி மழை நீர் செல்வதையும் நடுவிலே நெல் மட்டும் வெயிலில் காய்வதையும் பார்த்து வியந்து போனார்.

மழை பெய்தும் நெல் நனையாததைக் கண்டு அதிசயித்த வேதப்பட்டர் இந்த விஷயத்தை அரசரிடம் தெரிவிக்க ஓடினார். மன்னன் ராமபாண்டியனும் இந்த அதிசயத்தை காண விரைந்தார். நெல் நனையாமல் இருப்பதை பார்த்த மன்னனும் வியப்புற்றார்.

உலகிற்காக மழை பெய்வித்து வேதப்பட்டரின் நெல் நனையாது காத்த சிவபெருமானின் சிறப்பை நினைத்து மெய்சிலிர்த்தார். நெல்லுக்கு இறைவன் வேலியிட்டு காத்ததால் அன்றிலிருந்து இறைவனின் திருநாமத்தை ‘நெல்வேலி நாதர்’ என்றும் அதுவரை ‘வேணுவனம்’ என்று அழைக்கப்பட்ட அப்பகுதியை நெல்வேலி என்றும் அழைக்க ஆரம்பித்தனர்.


Comments

Popular posts from this blog

தக்காளி பச்சடி

மாவட்டக் கல்வி அலுவலர்(DEO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை TNPSC வெளியீடு.

பட்டாணி பிரியாணி