ரசப்பொடி செய்யும் முறை


ரசப்பொடி செய்யும் முறை

தேவையான பொருட்கள்
 

250 கிராம் மிளகாய் வற்றல்

800 கிராம் சீரகம்

400 கிராம் துவரம்பருப்பு

200 கிராம் மிளகு

100 கிராம் மல்லி

50 கிராம் வெந்தயம்

50 கிராம் பெருங்காயம்

100 கிராம் கறிவேப்பிலை

3 டேபிள்ஸ்பூன் நல்லெண்ணெய்

செய்முறை

* அடி கணமான வாணலியில் மிளகை சேர்த்து படபடவென பொரியும் வரை மெல்லிய தீயில் வைத்து நன்றாக வறுத்து தனியே எடுக்கவும்

* சீரகம் சேர்த்து மணம் வர வறுத்து எடுக்கவும்

 * தனித்தனியாக கொஞ்சம் கொஞ்சமாக சேர்த்து வறுத்து எடுக்கவும்

* மல்லி சேர்த்து வறுத்து எடுக்கவும் 

 * கறிவேப்பிலை சேர்த்து வறுத்து எடுக்கவும்

* துவரம்பருப்பை சேர்த்து மணம் வர வறுத்து எடுக்கவும் 

* அடுப்பை மெல்லிய தீயில் வைத்து கருகவிடாமல் வறுப்பது மிகவும் முக்கியமானது

 *  வெந்தயம் சேர்த்து வறுத்து எடுக்கவும்

 * சிறிது எண்ணெய் விட்டு பெருங்காயத்தை பொரித்து எடுக்கவும் 

 * சிறிது எண்ணெய் விட்டு காம்பு நீக்கிய மிளகாய் வற்றல் சேர்த்து நிறம் மாறாமல் வறுத்து எடுக்கவும்

*  இவை அனைத்தையும் நன்றாக 4_5 மணி நேரம் வரை வெயிலில் காய விடவும்

*  மாவு மிஷினில் கொடுத்து பொடி செய்து கொள்ளவும் 

* இதை சின்ன சின்ன பாக்கெட் ஆக போட்டு ஸ்டோர் செய்து கொள்ளவும்

*  சுவையான ஆரோக்கியமான மணமான ரசப்பொடி ரெடி...

Comments

Popular posts from this blog

தக்காளி பச்சடி

மாவட்டக் கல்வி அலுவலர்(DEO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை TNPSC வெளியீடு.

பட்டாணி பிரியாணி