சப்பாத்திக்கு ஒருமுறை இந்த சால்னாவை செய்யுங்க..
சப்பாத்திக்கு ஒருமுறை இந்த சால்னாவை செய்யுங்க..
கீழே சப்பாத்தி சால்னா ரெசிபியின் எளிய செய்முறை கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் படித்து செய்து சுவைத்து எப்படி இருந்தது என்று எங்களுடன் உங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொள்ளுங்கள்.
தேவையான பொருட்கள்:
* கசகசா - 1 டீஸ்பூன்
* முந்திரி - 5-7
* தேங்காய் - 2 பெரிய சில்லு
(பொடியாக நறுக்கியது
சின்ன வெங்காயம் - 6
* சோம்பு - 1 டீஸ்பூன்
தாளிப்பதற்கு....
தாளிப்பதற்கு....
* எண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* பிரியாணி இலை - 2
* ஏலக்காய் - 2
* பட்டை - 1 துண்டு
* கிராம்பு - 4
* சோம்பு - 1/2 டீஸ்பூன்
* சீரகம் - 1/2 டீஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2
(பொடியாக நறுக்கியது)
* தக்காளி - 2 (பொடியாக நறுக்கியது)
* உப்பு - சுவைக்கேற்ப
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீ1பூன்
* புதினா - சிறிது
* மஞ்சள் தூள் - 1/4 டீஸ்பூன்
* மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
* மல்லித் தூள் - 1 டீஸ்பூன்
* கரம் மசாலா - 1/2 டீஸ்பூன்
* தண்ணீர் - தேவையான அளவு
* கொத்தமல்லி - சிறிது
செய்முறை:
* முதலில் கசகசா மற்றும் முந்திரியை சுடுநீரில் 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
* பின்னர் மிக்சர் ஜாரில் நறுக்கிய தேங்காய், சின்ன வெங்காயம், சோம்பு மற்றும் ஊற வைத்துள்ள கசகசா மற்றும் முந்திரியை சேர்த்து நன்கு மென்மையாக அரைத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
* பின்பு ஒரு குக்கரை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, ஏலக்காய், பட்டை, கிராம்பு, சோம்பு, சீரகம் சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அதில் நறுக்கிய வெங்காயம், தக்காளியை சேர்த்து, தேவையான அளவு உப்பு சேர்த்து நன்கு தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* பிறகு அதில் இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து 1 நிமிடம் வதக்கி, பின் புதினாவை சேர்த்து வதக்க வேண்டும்.
* பின்னர் அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து ஒரு நிமிடம் குறைவான தீயில் வைத்து கிளறி, அரைத்து வைத்துள்ள மசாலாவை சேர்த்து நன்கு 2 நிமிடம் வதக்க வேண்டும்.
* பின் சால்னாவிற்கு தேவையான அளவு நீரை ஊற்றி, குக்கரை மூடி 1 விசில் விட்டு இறக்கி, விசில் போனதும் குக்கரைத் திறந்து, கொத்தமல்லியைத் தூவி கிளறினால், சுவையான சப்பாத்தி சால்னா தயார்.
Comments
Post a Comment