பாகிஸ்தானி ஸ்டைல் சிக்கன் மசாலா செய்வது எப்படி
பாகிஸ்தானி ஸ்டைல் சிக்கன் மசாலா செய்வது எப்படி
தேவையான பொருட்கள்:
* சிக்கன் - 1 1/2 கிலோ
* எண்ணெய் - 1 கப்
* இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டேபிள் ஸ்பூன்
* பெரிய வெங்காயம் - 2 , தக்காளி - 3 (பொடியாக நறுக்கியது)
* பச்சை மிளகாய் - 4 (துண்டுகளாக)
* மஞ்சள் தூள் - 1/2 டேபிள் ஸ்பூன்
* மிளகாய் தூள் - 2 டேபிள் ஸ்பூன்
* மல்லித் தூள் - 1 1/2 டேபிள் ஸ்பூன்
* உப்பு - சீரகத் தூள் - கரம் மசாலா - 1 டேபிள் ஸ்பூன்
* தயிர் - 250 கிராம்
* வெள்ளை மிளகுத் தூள் - 1 டேபிள் ஸ்பூன்
* பிரஷ் க்ரீம் - 150 மிலி
* வெண்ணெய் - 50-100 கிராம்
* கொத்தமல்லி - சிறிதளவு
செய்முறை:
* முதலில் சிக்கனை நன்கு கழுவிக் கொள்ள வேண்டும்.
* பிறகு ஒரு அகலமான வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடாகவும், இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து பச்சை வாசனை போக குறைவான தீயில் வைத்து வதக்க வேண்டும்.
* பின்பு அதில் சிக்கன் துண்டுகளை சேர்த்து நன்கு 5 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் நறுக்கிய வெங்காயம் மற்றும் தக்காளியை சேர்த்து 3-4 நிமிடம் நன்கு கிளறி விட்டு வேக வைத்து, பச்சை மிளகாயை சேர்த்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பிறகு அதில் மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லித் தூள், உப்பு, சீரகத் தூள், கரம் மசாலா சேர்த்து நன்கு கிளறி விட்டு, மூடி வைத்து 4-5 நிமிடம் கிளறி விட்டு வேக வைக்க வேண்டும்.
* பிறகு சிறிது 3 நிமிடம் மூடி வைத்து சிக்கனை வேக வைக்க வேண்டும். பின் அடுப்பை அணைத்துவிட்டு, 2 நிமிடம் கழித்து, தயிரை சேர்த்து நன்கு கிளறி விட்டு, மீண்டும் அடுப்பில் வைத்து 2 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* அடுத்து அதில் வெள்ளை மிளகுத் தூள் சேர்த்து நன்கு கிளறி விட்டு, பின் பிரஷ் க்ரீம்மை சேர்த்து 3-4 நிமிடம் கிளறி விட வேண்டும்.
* பிறகு வெண்ணெயை சேர்த்து கிளறி, கிரேவி சற்று கெட்டியாகும் வரை கொதிக்க வைத்து இறக்கி, கொத்தமல்லியைத் தூவி இறக்கினால், சுவையான பாகிஸ்தானி ஸ்டைல் சிக்கன் மசாலா ரெடி
Comments
Post a Comment