இடி_சாம்பார்
இடி_சாம்பார்
தேவையான பொருட்கள்
1/4 கப் துவரம்பருப்பு
எலுமிச்சை அளவு புளி
15 சின்ன வெங்காயம்
2 பச்சை மிளகாய்
2 முருங்கைக்காய்
4 வெண்டைக்காய்
2 கத்திரிக்காய்
5 துண்டு மாங்காய்
1/4 தேக்கரண்டி வெந்தயம்
1/2 தேக்கரண்டி மஞ்சள்தூள்
1 தேக்கரண்டி பெருங்காயத்தூள்
சிறிதளவு கறிவேப்பிலை
சிறிதளவு கொத்தமல்லி இலை
நல்லெண்ணெய்
உப்பு தேவையான அளவு
இடி சாம்பார் பொடி இடிக்க:
10 மிளகாய் வத்தல்
1 தேக்கரண்டி துவரம்பருப்பு
1/2 தேக்கரண்டி கடலைப்பருப்பு, மிளகு, அரிசி
3 தேக்கரண்டி கொத்தமல்லி
1 தேக்கரண்டி சீரகம்
1/4 தேக்கரண்டி வெந்தயம்
அரைக்க:
அரைமுறி தேங்காய் துருவல்
4 சின்ன வெங்காயம்
3 பூண்டு பற்கள்
1/4 தேக்கரண்டி சீரகம்
செய்முறை:
துவரம்பருப்பை கழுவி விட்டு 10
நிமிடங்கள் ஊறவைத்து தனியாக வேக வைத்து எடுத்துக்கொள்ளவும்.
புளியை ஊறவைத்து கரைத்து கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு காய்ந்ததும் இடிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து வாசனை வரும் வரை வறுத்து எடுத்து உரலில் இடித்தோ (அ) மிக்ஸியில் திரித்தோ எடுத்துக்கொள்ளவும்.
குறிப்பு: இதனை கொஞ்சம் பிறுபிறுவென இடித்துக் கொள்ளவும்.
காய்கறிகளை கழுவி நறுக்கிக் கொள்ளவும்,
வெங்காயம், பூண்டை தோலுரித்துக் கொள்ளவும்.
பச்சை மிளகாயை நீளவாக்கில் கீறி வைக்கவும்.
அரைக்க கொடுத்த பொருட்களை அம்மியிலோ, அரவை இயந்திரத்திலோ அரைத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் புளிக்கரைசலோடு மஞ்சள் தூள் சேர்த்து தேவையான அளவு குழம்பிற்கு தண்ணீர் சேர்த்துக் கூட்டிக்கொண்டு,
நறுக்கிய காய்கறிகள், வெங்காயம் ஆகியவற்றை சேர்த்து கொதிக்க வைக்கவும்.
காய்கறிகள் அரைவேக்காடு வெந்தவுடன் உப்பு சேர்த்து இடித்து வைத்துள்ள பொடியையும் சேர்த்து கொதிக்க விடவும்.
பின்னர் அரைத்து எடுத்த சேர்மானங்களையும், வேக வைத்த பருப்பையும் சேர்த்து பச்சை வாசனை போக கொதிக்கவிடவும்.
பின் இருப்புச்சட்டி வைத்து, நல்லெண்ணெய் ஊத்தி காய்ந்ததும் முறையே கடுகு, குத்து பருப்பு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்து இடிசாம்பாரில் கொட்டி, பெருங்காயத்தூள் சேர்த்து மீண்டும் கொதிக்க விடவும்.
கொதித்த பின் இறக்கி மல்லி இலைகளை தூவி மூடி வைத்தால் இடிசாம்பார் தயார்.
மூன்று நபர் சாப்பிடுவதற்கு சரியாக இருக்கும். உங்கள் தேவைக்கேற்ப அளவுகளை கூட்டிக்கொள்ளலாம்.
Comments
Post a Comment