தேங்காய் லட்டு'
'தேங்காய் லட்டு'
தேவையான பொருட்கள் :
தேங்காய் துருவல் – 2 கப்
சர்க்கரை – 3/4 கப்
பால் – 2 கப்
நெய் – 4 டேபிள் ஸ்பூன்
ஏலக்காய் தூள் – 1/2 டீஸ்பூன்
பாதாம் – 10
பிஸ்தா – 10
முந்திரி – 10
**** அடுப்பில ஒரு சட்டியை வச்சு அதில 2 ஸ்பூன் நெய்யை சேர்த்துக்கோங்க. அது கூட 2 கப் தேங்காய் துருவலை சேர்த்து நல்லா வதக்கிக்கோங்க.
**** நல்லா வதங்கினதும் 2 கப் பாலை சேர்த்து நல்லா வேக வச்சுக்கோங்க.
**** அடுத்து அது கூட 3/4 கப் சர்க்கரையை சேர்த்து நல்லா கலந்துக்கோங்க. சர்க்கரை கரைஞ்சு கொஞ்சம் நீர்த்து போனது போல இருக்கும். அதில உள்ள தண்ணீ எல்லாம் நல்லா உள்வாங்கும் வரையில நல்லா வேகவிடுங்க.
**** கடைசியா அதில 1/2 டீஸ்பூன் ஏலக்காய் தூள், பாதாம், பிஸ்தா மற்றும் முந்திரி எல்லாத்தையும் நல்லா பொடி பொடியா நறுக்கி சேர்த்து நல்லா கலந்துக்கோங்க.
****நல்லா சூடு ஆறினதும், அதில, மீதமுள்ள 2 ஸ்பூன் நெய்யை ஊத்தி நல்லா கலந்து சிறிய சிறிய உருண்டையா பிடிக்கணும்.
ரெடி.
Comments
Post a Comment