திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்

திருநெல்வேலி நெல்லையப்பர் கோவில்

இங்கிருக்கும் நெல்லையப்பர் கோவில் மிகவும் பிரசித்து பெற்றதாகும். முன்பொரு காலத்தில் அரண்மனைக்கு பால் ஊற்றிக்கொண்டிருந்தார் ராமகோனார் என்பவர். அப்படி ஒருநாள் செல்லும் பொழுது வழியில் உள்ள ஒரு கல் அவரது காலை இடறிவிட பால் முழுவதும் அங்கிருக்கும் கல்லின் மீது கொட்டிவிடுகிறது. இப்படியே தொடர்ந்து இரண்டு, மூன்று நாட்கள் நடக்க பயந்து போன ராமகோனார், இதை மன்னரிடம் தெரிவிக்கிறார்.😙
உடனே மன்னர் ஆட்களை அனுப்பி அந்த கல்லை தோண்டுவதற்கு உத்தரவிடுகிறார். கல்லை தோண்டும் போது கல்லின் மீது கோடாரி வெட்டிவிட ரத்தம் பீறிட்டுக் கொண்டு வருகிறது. இதை பார்த்து பயந்து போய் அனைவரும் நிற்கும்போது, வானிலிருந்து அசரிரீ கேட்க, உடனே கல்லை முழுமையாக தோண்டி பார்த்தால், உள்ளே சிவலிங்கம் இருந்தது. நெல்லையப்பரின் இடப்பக்கத்தில் இன்றும் வெட்டுக்காயத்தை காணலாம். இதுவே நெல்லையப்பர் கோவில் தோன்றிய வரலாறாகும்.

Comments

Popular posts from this blog

தக்காளி பச்சடி

மாவட்டக் கல்வி அலுவலர்(DEO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை TNPSC வெளியீடு.

பட்டாணி பிரியாணி