கொழுக்கட்டை

கொழுக்கட்டை

தேவையான பொருட்கள்

  • வேர்க்கடலை- 100g
  • வெல்லம்- 150g
  • நெய்- தேவையான அளவு
  • தேங்காய் துருவியது - 1 மூடி
  • ஏலக்காய் தூள்- ½ ஸ்பூன்
  • இடியாப்ப மாவு. - 1 கப்
  • உப்பு- 1 சிட்டிகை


செய்முறை

முதலில் ஒரு பாத்திரத்தில் வெல்லப் பாகு காய்ச்சி எடுத்துக்கொள்ளவும்.

பிறகு ஒரு பாத்திரத்தை அடுப்பில் வைத்து, நெய் சேர்த்து சூடானதும் துருவிய தேங்காய் வெல்ல பாகு, ஒன்றுக்கு பாதியாக அரைத்த வேர்க்கடலை சேர்க்கவும்.

பின் இது கொஞ்சம் கெட்டியானதும் அதில் நெய் மற்றும் ஏலக்காய் தூள் சேர்த்து பூரணத்தை கிளறி இறக்கவும்.

தித்திக்கும் சுவையில் கொழுக்கட்டை.., இலகுவாக செய்வது எப்படி? | Kozhukattai Recipe In Tamil

கொழுக்கட்டை செய்ய இடியாப்பமாவில் உப்பு மற்றும் சுடுதண்ணீர் சேர்த்து கெட்டியாக பிணைந்து எடுத்துக்கொள்ளவும்.

அடுத்து மாவை வட்டமாக தேய்த்து அதன் மேல்  பூரணத்தை வைத்து ஓரங்களை மடித்துவிடவும்.

கொழுக்கட்டையை இட்லி பாத்திரத்தில் 15 நிமிடம் வேகவைத்து எடுத்தால் சுவையான கொழுக்கட்டை ரெடி.  

Comments

Popular posts from this blog

தக்காளி பச்சடி

மாவட்டக் கல்வி அலுவலர்(DEO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை TNPSC வெளியீடு.

பட்டாணி பிரியாணி