மட்டன் குழம்பு : ஸ்பெஷ்ல் ரெசிபி

 மட்டன் குழம்பு ரெசிபி



தேவையான பொருட்கள்

அரை கிலோ மட்டன், 3 ஸ்பூன் எண்ணெய் 

3 கிராம்பு,  பிரியாணி இலை 

1 ஸ்பூன் சீரகம் 

200 கிராம் சின்ன வெங்காயம் நறுக்கியது

1 ஸ்பூன் இஞ்சி பூணடு பேஸ்ட், 1 கொத்து கருவேப்பிலை 

2 தக்காளி நறுக்கியது, 1 ஸ்பூன் மிளகாய் பொடி 

1 ½ ஸ்பூன் மல்லிப்போடி , சீரகத்தூள் கொஞ்சம் 

கரம் மசலா கொஞ்சம், அரை ஸ்பூன் மிளகு தூள் 

2 கப் தண்ணீர் , உப்பு 

செய்முறை : 

மட்டனை நன்றாக கழுவ வேண்டும். 

ஒரு குக்கரில் எண்ணெய் சேர்த்து கிராம்பு, பட்டை,பிரியாணி இலை, ஏலக்காய் சேர்த்து கிளரவும்.

இதில் சீரகம் சேர்த்து கிளரவும். 

சின்ன வெங்காயம் நறுக்கியதை சேர்த்து கிளரவும். 

இஞ்சி பூண்டு விழுது சேர்த்து கிளரவும். கருவேப்பிலை சேர்க்கவும். 

 இதில் தக்காளி நறுக்கியது சேர்க்கவும்.

  மட்டன் சேர்த்து நன்றாக கிளரவும்.

 இதில். மிளகாய் தூள், மல்லித் தூள், கரம் மசாலா சேர்த்து கிளரவும்.

  மிளகு தூள் சேர்த்து கிளரவும். தண்ணீர், உப்பு சேர்த்து கொதி வந்ததும் 6 விசில் விட்டு எடுக்கவும். 

Comments

Popular posts from this blog

தக்காளி பச்சடி

மாவட்டக் கல்வி அலுவலர்(DEO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை TNPSC வெளியீடு.

பட்டாணி பிரியாணி