உக்காரை
செட்டிநாடு ஸ்டைல் உக்காரை செய்யலாமா
ஒரு கப் பாசிப்பருப்பு எடுத்து,
அதை ஒரு இரும்பு கடாய் அல்லது நான்ஸ்டிக் கடாயை அடுப்பை சிம்மில் வைத்து ( அடுப்பை சிம்மில் தான் வைக்கணும் ) அதை பச்சை வாசனை போகும் வரை வறுத்து எந்த கப்பில் பாசி பருப்பு எடுத்தோமோ அதே கப்பில் மூன்று கப் தண்ணீரை சேர்த்து அதை ஒரு குக்கருக்கு மாற்றி மூன்று விசில் வைத்து இறக்கி வைத்துக் கொள்ளவும்
இப்ப ஒரு அரை கப் ரவையை எடுத்து ஒரு அரை கப் துருவியதேங்காயை எடுத்து ரெண்டுஏலக்காயை எடுத்து ஒரு ஸ்பூன் சர்க்கரையோடு சேர்த்து பொடி பண்ணி வச்சுக்கோங்க
ஒரு அரை கப் நெய்
நிறைய நெய் சேர்த்தா உக்கார உள்ள வழுக்கிகிட்டு போகும்
#முந்திரி நெய்யில் தீய்ந்து போகாமல் அடுப்பை சிம்மில் வைத்து பொன்னிறமாக ரொம்ப பொறுமையாக வறுத்து எடுத்து கொள்ளுங்கள்
கடைசியாக ஒரு கப் #வெல்லம் எடுத்து துருவி ஒரு கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து ஒரு கப் #தண்ணிர் சேர்த்து துருவிய #வெல்லத்தை அதில் போட்டு நன்றாக கரைத்து வச்சுடுங்க போதும்
#முந்திரியை வறுத்து நெய்யில் அரை கப் ரவை எடுத்தோம் அல்லவா அதை கொட்டி அடுப்பை சிம்மில் வைத்து வறுக்க வேண்டும்
அது பாதி அளவு வறுபட்டதும் துருவிய தேங்காயை சேர்த்து அதையும் அதையும் நன்றாக வறுத்து பின்
#ஏலக்காய், வேக வைத்த பாசிப்பருப்பு ,காய்ச்சியவெல்லம்
இதெல்லாம் ஒன்றன் பின் ஒன்றாக சேர்த்து கை விடாமல் பத்து நிமிடம் வரை கிளறி கொண்டே இருக்க வேண்டும் இல்லை என்றால் கட்டி கட்டியாகி விடும்
ஓரளவுக்கு திரண்டு வந்தவுடன் வறுத்து வைத்துள்ள
#முந்திரியை சேர்த்து மீதமுள்ள நெய்யையும் கொஞ்சம் தாராளமாக சேர்த்து கடாயில் ஒட்டாமல் வரும் வரை கிளறி இறக்கினால் உக்காரை ரெடி
Comments
Post a Comment