மீல் மேக்கர் கறி மசால் செய்யும் முறை

மீல் மேக்கர் கறி மசால் செய்வது எப்படி
 ...

தேவையான பொருட்கள் :::

▢200 கிராம் மீல் மேக்கர் 
▢2 பெரிய வெங்காயம் 
▢1 டீஸ்பூன் இஞ்சி பூண்டு விழுது 
▢1 கொத்து கருவேப்பிலை 
▢டீஸ்பூன் சோம்பு 
▢1 டீஸ்பூன் கரம் மசாலா 
▢1 டேபிள் ஸ்பூன் டீஸ்பூன் தூள் 
▢கொத்தமல்லி இலைகள் சிறிதளவு 
▢உப்பு தேவையான அளவு 
▢எண்ணெய் தேவையான அளவு 

செய்முறை:  :::

 ▢ முதலில் மீல் மேக்கரை சுடு தண்ணீரில் 10 நிமிடங்கள் ஊற வைக்கவும்.

 ▢ ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு போட்டு தாளித்து கொள்ளவும் 

▢ பிறகு நறுக்கிய பெரிய வெங்காயம் கருவேப்பிலை உப்பு சேர்த்து நன்றாக வதக்கவும். வெங்காயம் நன்றாக வதங்கியவுடன் இஞ்சி பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போகும் வரை நன்றாக வதக்கிக்கொள்ளவும் 

▢ பிறகு ஊற வைத்த மீல் மேக்கரில் உள்ள தண்ணீரை நன்றாக பிழிந்து எடுத்து அதனை சேர்த்துக் கொள்ளவும். மீல் மேக்கர் ஓரளவு வெந்தவுடன் அதில் மிளகுத்தூள் சேர்த்து பிரட்டவும்.

 ▢ பிறகு கரம் மசாலா சேர்த்து நன்றாக வதக்கி மீல் மேக்கர் நன்றாக வெந்து வருவதற்கு சிறிதளவு தண்ணீர்ஊற்றி வேக வைக்கவும்.

 ▢ இறுதியாக கொத்தமல்லி இலைகள் சேர்ந்து இறக்கினால் சுவையான சிம்பிளான மீல்மேக்கர் பேப்பர் ரோஸ்ட் தயார்...

Comments

Popular posts from this blog

தக்காளி பச்சடி

மாவட்டக் கல்வி அலுவலர்(DEO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை TNPSC வெளியீடு.

பட்டாணி பிரியாணி