தஞ்சாவூர் ஸ்பெஷல் பூண்டு சட்னி
தஞ்சாவூர் ஸ்பெஷல் பூண்டு சட்னி
தேவையான பொருட்கள்:
* எண்ணெய் - 3 டீஸ்பூன்
* வரமிளகாய் - 15
* முழு பூண்டு - 2
* தக்காளி - 3
* கல்உப்பு - 1 டீஸ்பூன்
* நல்லெண்ணெய் - 2 டேபிள் ஸ்பூன்
* கடுகு - 1/2 டீஸ்பூன்
* உளுத்தம் பருப்பு - 1/2 டீஸ்பூன்
* கறிவேப்பிலை - சிறிது
செய்முறை:
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 3 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி சூடாகவும் , அதில் வரமிளகாய் சேர்த்து மிதமான சூட்டில் நிறம் மாறும் வரை வதக்க வேண்டும்.
* அடுத்து உரித்த பூண்டுகளை சேர்த்து நன்கு வதக்க வேண்டும்.
* பின்பு அதில் தக்காளி , கல் உப்பையும் சேர்த்து, தக்காளி மென்மையாகும் வரை வதக்க வேண்டும்.
* தக்காளி நன்கு வதங்கியதும் நன்கு குளிர வைக்க வேண்டும்.
* அடுத்து மிக்ஸியில் வதக்கிய பொருட்களை சேர்த்து, ஓரளவு கொரகொரவென்று அரைத்துக் கொள்ள வேண்டும்.
* அடுத்து ஒரு வாணலியில் 2 டேபிள் ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு, உளுத்தம் பருப்பு மற்றும் கறிவேப்பிலை சேர்த்து தாளிக்க வேண்டும்.
* பின் அரைத்த சட்னியை அதில் சேர்த்து ஒரு நிமிஷம் நன்கு கிளறவும். சூப்பரா தஞ்சாவூர் ஸ்பெஷல் பூண்டு சட்னி ரெடி
Comments
Post a Comment