வெங்காய பஜ்ஜி

 வெங்காய பஜ்ஜி எப்படி செய்யலாம்னு பார்க்கலாம்...


தேவையான பொருட்கள் :

கடலை மாவு : 150 கிராம் 
அரிசி மாவு : 2 ஸ்பூன்
மிளகாய்த்தூள் : 3/4 ஸ்பூன்
சமையல் சோடா : 1/2 ஸ்பூன் 
உப்பு தேவையான அளவு
கடலை எண்ணெய் : பொரித்து எடுக்க
வெங்காயம் (பெரியது) : 4 

வெங்காயம் இருக்கறதுலேயே பெருசா வாங்கிக்கோங்க... தோல் நீக்கிட்டு வட்ட வட்டமா  ஓரளவுக்கு மெல்லிசா கட் பண்ணிக்கோங்க...

பொரிச்சு எடுக்க கடலை எண்ணெய்தான் சரியா இருக்கும்... கடலை எண்ணெய்ல பொரிச்சாதான் சுவை இன்னும் அருமையா இருக்கும்...

செய்முறை :

ஒரு பாத்திரத்தில கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய்த்தூள், சமையல் சோடா, உப்பு எல்லாத்தையும் சேர்த்து நல்லா கலந்துட்டு அது கூட தேவையான அளவு தண்ணி சேர்த்து நல்லா தோசை மாவு பதத்துக்கு கலந்துக்கோங்க...

மாவு தண்ணியா கரைச்சிட்டா, பஜ்ஜியில மாவு ஒட்டாம வெங்காயம் வெளியே தெரியும். அதனால மாவு பதம் ரொம்ப முக்கியம்.

ஒரு சட்டியை அடுப்பில வைத்து கடலை எண்ணெயை ஊத்தி எண்ணெய் சூடானதும் வெங்காய சீவலை அலுங்காம எடுத்து மாவில ஒரு முக்கு முக்கி, முன்னும் பின்னும் பிரட்டி எண்ணெயில போடுங்க...

பஜ்ஜி ஒருபக்கம் வெந்ததும் திருப்பி போட்டு வேக விடுங்க. எண்ணெய் குமிழி அடங்கினதும் , பஜ்ஜியை எடுத்து கரண்டியில கொஞ்ச நேரம் வச்சுட்டு எண்ணெய் வடிஞ்சதும் ஒரு பாத்திரத்துல வச்சிடுங்க....

சாப்பிட ரெடி 

####    இந்த வெங்காய பஜ்ஜிக்கு, தேங்காய் சட்னி தொட்டு சாப்பிட சூப்பரா இருக்கும் 

Comments

Popular posts from this blog

தக்காளி பச்சடி

மாவட்டக் கல்வி அலுவலர்(DEO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை TNPSC வெளியீடு.

பட்டாணி பிரியாணி