பருப்பு தோசை செய்வது எப்படி
பருப்பு தோசை செய்வது எப்படி
தேவையான பொருட்கள் ::::
பச்சரிசி - அரை ஆழாக்கு
துவரம் பருப்பு - 1 ஆழாக்கு
உளுத்தம் பருப்பு - 1 ஆழாக்கு
மிளகாய் வற்றல் - 25 கிராம்
சிறிய வெங்காயம் - 200 கிராம்
சீரகம் - அரை தேக்கரண்டி
சோம்பு - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 1 கப்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :::
வெங்காயத்தை பொடியாக நறுக்கிக் கொள்ளுங்கள்...
பச்சரிசி, துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு ஆகியவற்றைத் தனித்தனியாகத் தண்ணீரில் ஊறப் போடுங்கள்....
ஒரு மணி நேரத்திற்குப் பிறகு நீரை வடித்துவிட்டு அவற்றை எடுத்து மிளகாய் வற்றல், சோம்பு, சீரகம் ஆகியவற்றையும் சேர்த்து கரகரப்பாக அரைத்துக் கொள்ள வேண்டும்....
பிறகு நறுக்கிய வெங்காயத்தையும் அதில் போட்டு நன்றாகக் கலந்து கொள்ளுங்கள்....
அடுப்பில் தோசைக்கல்லை வைத்து அது காய்ந்ததும் எண்ணெய் தடவி ஒரு கரண்டி மாவை எடுத்து அதில் ஊற்றி ஊத்தப்பம் அளவிற்குப் பரப்புங்கள்...
தோசையைச் சுற்றிச் சிறிது எண்ணெயை ஊற்றுங்கள்....
ஒரு பக்கம் நன்கு வெந்ததும் தோசைக் கரண்டியால் திருப்பி போடுங்கள். அந்தப் பக்கமும் வெந்ததும் எடுத்து ஏதாவதொரு சட்னியுடன் சேர்த்துச் சாப்பிடுங்கள்....
Comments
Post a Comment