ஸ்டஃப்டு பூரி(stuffed poori)
ஸ்டஃப்டு பூரி(stuffed poori)
ஸ்டப்பிங்(stuffing making) செய்ய...
தேவையானது
உருளைக்கிழங்கு 2
கேரட் 1, பீன்ஸ் 8 ,பச்சைப்பட்டாணி ஒரு கைப்பிடி , பெரிய வெங்காயம் ஒன்னு
இஞ்சி, பூண்டு விழுது சிறிதளவு
மிளகாய்த்தூள் 2 டீஸ்பூன் ( tspn)
கரம் மசாலாத்தூள் ஒரு டீஸ்பூன், சீரகம் அரை டீஸ்பூன்(tspn)
உப்பு எண்ணெய் தேவையான அளவு.
செய்முறை
உருளைக்கிழங்கை வேகவைத்து தோலை நீக்கி மசிச்சுட்டு.
கேரட் பீன்ஸ் வெங்காயத்தை சுத்தம் செய்து மிகவும் பொடியாக நறுக்கி வைச்சுக்கணும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் விட்டு காய்ந்ததும் சீரகம் தாளித்து, வெங்காயம், கேரட், பீன்ஸ் பச்சைப் பட்டாணி சேர்த்து நன்கு வேகும் வரை வதக்கி, பிறகு இஞ்சி பூண்டு விழுது, மிளகாய்த்தூள் சேர்த்து பச்சை வாடை நீங்க நன்கு வதக்கிட்டு.
கடைசியில் மசித்த உருளைக்கிழங்கு ,கரம் மசாலா தேவையான உப்பு சேர்த்து நன்கு சுருண்டு வரும் வரை கிளறி இறக்கவும்.
மாவில் சிறு உருண்டை எடுத்து சிறிய கிண்ணம் போல் செய்து அதுக்குள்ள சிறிதளவு கிழங்குக் கலவையை வைச்சு மூடி உருட்டி சிறிய பூரியாக அழுத்தாமல் தேய்க்கவும்.
வாணலியில் எண்ணெயை காயவிட்டு தேய்த்து வைத்துள்ள பூரிகளைப் பொரித்து எடுக்கவும்.
பி.கு. பூரிக்கு மாவு பிசைந்தவுடன் திரட்டி சுட்டு விட வேண்டும் அப்போதுதான் பூரி உப்பலாகவே இருக்கும் எண்ணெய்கோர்க்காது.
மாவில் ஒரு டேபிள் ஸ்பூன் ரவையை கலந்து பிசைந்து பூரி திரட்ட பூரி மொறு மொறு என்று இருக்கும்
Comments
Post a Comment