சௌசௌ சட்னி

சௌசௌ சட்னி 


 தேவையான பொருட்கள்

தக்காளி – 1

பச்சை மிளகாய் – 1

சௌ சௌ – 2

வறுத்து அரைக்க தேவையான பொருட்கள்

கடலை பருப்பு – ஒரு டேபிள் ஸ்பூன்

உளுந்து – ஒரு டேபிள் ஸ்பூன்

வர மிளகாய் – 4

வரமல்லி – ஒரு டேபிள் ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

தாளிக்க தேவையான பொருட்கள்

எண்ணெய் – 4 டேபிள் ஸ்பூன்

கடுகு – கால் ஸ்பூன்

உளுந்து – கால் ஸ்பூன்

கறிவேப்பிலை – ஒரு கொத்து

செய்முறை

சௌசௌ தோலை நீக்கிவிட்டு, பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும்.

பின்னர் அதே கடாயில் எண்ணெய் ஊற்றி நறுக்கிய சௌசௌ, தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கிக்கொள்ளவேண்டும்.

ஆகிய பிறகு அனைத்தையும்  சேர்த்து அரைத்து எடுத்துக்கொள்ளவேண்டும். தண்ணீர் சேர்க்கக்கூடாது.

ஒரு தாளிப்பு கடாயில் எண்ணெய் சேர்த்து அதில் கடுகு, உளுந்து, கறிவேப்பிலை சேர்த்து அரைத்த சட்னியில் ஊற்றினால் சௌசௌ சட்னி தயார். 

சப்பாத்தி, பூரி, இட்லி, தோசை, சாதம் என எதனுடன் வேண்டுமானாலும் தொட்டுக்கொண்டு சாப்பிடலாம்.

Comments

Popular posts from this blog

தக்காளி பச்சடி

மாவட்டக் கல்வி அலுவலர்(DEO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை TNPSC வெளியீடு.

பட்டாணி பிரியாணி