ஹெல்தி சப்பாத்தி

காய்கறிகள் சேர்த்த ஹெல்தி சப்பாத்தி. 

கோதுமை மாவு – 200 கிராம்

கேரட் துருவல்,

 கோஸ் துருவல்

பொடியாக நறுக்கிய குடைமிளகாய்

வெங்காயம் – 1(பொடியாக நறுக்கியது)

பச்சைப் பட்டாணி – 100 கிராம்

மிளகுத் தூள் – அரை தேக்கரண்டி

இஞ்சி, பூண்டு விழுது – தலா ஒரு தேக்கரண்டி

எண்ணெய் – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

செய்முறை

கோதுமை மாவுடன் இஞ்சி பூண்டு விழுது, சிறிதளவு எண்ணெய் சேர்த்து, கொஞ்சம் தண்ணீர் விட்டுக் கெட்டியாகப் பிசையணும். பிசைஞ்ச மாவைச் சிறு உருண்டைகளாக உருட்டி சப்பாத்தியா செய்யணும்.. 

 சப்பாத்தி சுட்டு எடுத்து பிறகு சிறு துண்டுகளாக நறுக்கணும். அடுத்து கடாயில் எண்ணெய் விட்டு சூடாக்கி, கேரட் துருவல், கோஸ் துருவல், பொடியாக நறுக்கிய குடைமிளகாய், வெங்காயம், பச்சைப் பட்டாணியைச் சேர்த்து வதக்கவும். 

பிறகு இதில் மிளகுத்தூள், உப்பு சேர்த்து வதக்கவும். இதனுடன் சப்பாத்தித் துண்டுகளைச் சேர்த்துக் கிளறி இறக்கணும்.தயார்.

Comments

Popular posts from this blog

தக்காளி பச்சடி

மாவட்டக் கல்வி அலுவலர்(DEO) பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிக்கை TNPSC வெளியீடு.

பட்டாணி பிரியாணி