வாழைக்காய் ப்ரை
வாழைக்காய் ப்ரை
வாழைக் காய் – 2
பொரிக் கடலை – 2 ஸ்பூன்
கசகசா – 1 ஸ்பூன்
உளுத்தம் பருப்பு – 1 ஸ்பூன்
சோம்பு – ஒன்றரை ஸ்பூன்
மிளகாய் வத்தல் - 10
நல்லெண்ணெய் – 3 ஸ்பூன்
உப்பு – தேவையான அளவு
செய்முறை
வாழைக்காயின் தோலை சீவியபிறகு நீளத் துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவும்.
1 ஸ்பூன் சோம்பு, மிளகாய், பொரிக் கடலை, கசகசா, இவற்றை மிக்ஸியில் போட்டு அரைக்கணும்.
வாழைக்காய் துண்டுகளுடன் உப்பு மற்றும் தூளாக்கியுள்ள பொருட்களைப் கலந்து வைக்கவும்.
கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும் சோம்பு, உளுத்தம் பருப்பு போட்டுத் தாளித்து,
வாழைக்காய் துண்டுகளைப் போட்டு நன்றாக வதக்கினால் வாழைக்காய் ப்ரை தயார்.
Comments
Post a Comment